தொழிலாளர் நல செஸ் முறையை ரத்து செய்யக்கூடாது: மத்திய அரசுக்கு தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

தொழிலாளர் நல செஸ் முறையை ரத்து செய்யக்கூடாது: மத்திய அரசுக்கு தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
Updated on
1 min read

தொழிலாளர் நல செஸ் முறையை மத்திய அரசு ரத்து செய்யக்கூடாது என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

மத்திய அரசு, தொழிலாளர் நல செஸ் முறையை கைவிடுவதை எதிர்த்து, ஜிஎஸ்டி மசோதா-செஸ் சட்டங்கள் ரத்து குறித்த தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் சேப்பாக்கம் விருந் தினர் மாளிகை அருகில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரதப் போராட்டத்தை எச்எம்எஸ் தேசிய தலைவர் சி.ஏ.ராஜா ஸ்ரீதர் தொடங்கிவைத்தார்.

இந்த போராட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். போராட்டம் குறித்து அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் இரா.கீதா கூறும்போது, “உப்பளம், நிலக்கரி, பீடி, கட்டுமானம் போன்ற பல தொழில் களில் மத்திய அரசின் செஸ் பெறப்பட்டு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நல செஸ் பெறுவதற்கான மத்திய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதால் தொழிலாளர் நலத்திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தொழிற்சங்கங்களை கலந்து பேசாமல் செய்யப்பட்ட செஸ் ரத்து நடவடிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தொழிலாளர் நலனுக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

சரக்கு மற்றும் சேவை வரியை காரணம் காட்டி கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்துக்கான கட்டுமான செஸ் மற்றும் பீடித் தொழிலாளர் நல நிதிக்கான பீடி செஸ் பாதிக்கப்படாமல் காக்க வேண்டும்.

தமிழ்நாடு உடல் உழைப்பு தொழி லாளர் சட்டத்தின் கீழ் கட்டுமானம், ஆட்டோ ஆகியவற்றுக்கான நல லெவிகள், மீன் தொழிலுக்கான நல லெவி ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in