

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை யால் பொருளாதாரத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை.
பயிர்களுக்கான காப் பீட்டு பிரிமியத் தொகையில் ஒரு சதவீதத்தை விவசாயி கட்டினால் போதுமானது. மீதித் தொகையை மத்திய, மாநில அரசுகள் செலுத்தும். இந்த திட்டம் குறித்து விவசாயிகளிடையே விழிப் புணர்வை ஏற்படுத்த வேண் டும்.
வறட்சியால் பயிர் சேத மடைந்தால், நிச்சயம் இழப் பீட்டுத் தொகை கிடைக் கும். எனவே, விவசாயிகள் கவலைப்படத் தேவை யில்லை.
தமிழகத்தில் வறட்சி பாதிப்பு குறித்த அறிக் கையை மத்திய அரசுக்கு இதுவரை தமிழக அரசு அனுப்பவில்லை. அறிக்கை அனுப்பினால்தானே, எந்த அளவுக்கு உதவித்தொகை அளிப்பது என்பதை மத்திய அரசு முடிவு செய்ய முடியும்? தமிழக அரசு இன்னும் வேகமாகச் செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.