மாணவர்கள் போராட்டத்தின் பின்னணியில் இருப்பது யார்?- போலீஸார் விசாரிக்க தமிழிசை வலியுறுத்தல்

மாணவர்கள் போராட்டத்தின் பின்னணியில் இருப்பது யார்?- போலீஸார் விசாரிக்க தமிழிசை வலியுறுத்தல்
Updated on
1 min read

மாணவர்கள் போராட்டத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை போலீஸார் கண்டறிய வேண்டும் என்று நேற்று மதுரை வந்த பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டைப் பார்ப்பதற்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று மதுரை வந்தார். அவரை போராட்டக்காரர்கள் வழிமறித் துள்ளனர். அதனால், அவரும் அலங்காநல்லூர் செல்லும் முடிவைக் கைவிட்டு தான் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் என்னை போராட்டக்காரர்கள் வழிமறித்து நிரந்தரத் தீர்வு வேண்டும் என்றனர். இது நிரந்தரத் தீர்வுதான் என பலமுறை சொல்லியும் புரிந்துகொள்ளவில்லை.

மாணவர்களையும் தாண்டி இப்போராட்டம் வேறுவிதமாகப் போய்க் கொண்டிருக்கிறது. மாணவர்கள் போராட்டத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை போலீஸார் கண்டறிய வேண்டும்.

மாணவர்களின் உணர்வு களை மதிக்கிறேன். அவர்க ளின் போராட்டத்துக்கு மதிப் பளித்துதான் மத்திய அரசு உதவியுடன் மாநில அரசு அவசரச் சட்டம் கொண்டு வந் துள்ளது. இதுவே நிரந்தரத் தீர்வுதான். இதை பலர் ஏற் றுக்கொள்கிறார்கள் ஆனால், ஏற்றுக்கொள்ள வேண்டாம் எனக் கூறி, சிலர் தடுக்கிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக் கட்டுப் போட்டி நடந்தால் ஏராள மானவர்கள் வருவார்கள் என்ற அடிப்படையில்தான், உடனடியாக ஏற்பாடுகள் நடைபெற்றன. இந்நிலையில், அவசரச் சட்டம் கொண்டு வந்த தையும், அவசரமாக ஜல்லிக் கட்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டதையும் சந்தேகமாக பார்க்கப்படுவது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in