பிளஸ் 2 தேர்வு முடிவு: 16-வது இடத்தில் தலைநகர் சென்னை

பிளஸ் 2 தேர்வு முடிவு: 16-வது இடத்தில் தலைநகர் சென்னை
Updated on
1 min read

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியானது. மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் தலைநகர் சென்னை 16-வது இடத்தில் உள்ளது.

சென்னை மாவட்டத்தில் மொத்த 407 பள்ளிகளைச் சேர்ந்த 53,347 மாணவ, மாணவியர் பிளஸ் 2 தேர்வை எதிர்கொண்டனர். இவர்களில் 49,607 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 92.99%. சென்னையில் மொத்தம் 69 பள்ளிகளில் 100% தேர்ச்சி விகிதம் எட்டப்பட்டுள்ளது. மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதப் பட்டியலில் சென்னை 16-வது இடத்தில் இருக்கிறது.

இருப்பினும் சென்னையில் எந்த ஒரு அரசுப் பள்ளியிலும் 100% தேர்ச்சி விகிதம் எட்டப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in