அறிவியலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்- அமைச்சர் விளக்கம்

அறிவியலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்- அமைச்சர் விளக்கம்
Updated on
1 min read

மத்திய அரசு, அறிவியல் துறைக்கு போதுமான நிதி ஒதுக்காததை சுட்டி காட்டி அரசியல்வாதிகளை முட்டாள்கள் என பாரத ரத்னா விருது பெறும் விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் சாடியுள்ள நிலையில் மத்திய அரசு தரப்பில் இருந்து முதல் விளக்கம் வந்துள்ளது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் மனீஷ்திவாரி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அறிவியளாளர்களை ஊக்குவிக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தன் சக்திக்கு மீறியும் செய்துள்ளது.

அதனால் தான் மங்கள்யான், சந்திராயன் போன்ற விண்கலங்களை செலுத்தவும், ஐ.என்.எஸ். அரிஹந்த் போன்ற போர்க்கப்பலை உள்நாட்டிலேயே உருவாக்கவும் சாத்தியமாகியுள்ளது. இதை வேறு எந்த் ஒரு அரசும் செய்ததில்லை என திவாரி தெரிவித்துள்ளார். இதை வேறு எந்த் ஒரு அரசும் செய்ததில்லை என திவாரி தெரிவித்துள்ளார்.

பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டபோது, தன் பணியை அங்கிகரித்த அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறிய சி.என்.ஆர். ராவ், அடுத்த நாளே அரசை கடுமையாக விமர்சித்துள்ள வேளையில் அமைச்சர் மனிஷ்திவாரி கூறியிருக்கும் விளக்கம் போதுமானதாக உள்ளதா? திவாரி அணுகுமுறை சரியானதா? விவாதிக்கலாம் வாங்க.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in