

தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.248 உயர்ந்து ரூ.22,648-க்கு விற்பனை செய்யப் பட்டது.
சர்வதேச அளவில் தங்கம் விலை உயரும்போது, உள்ளூரி லும் விலை உயர்கிறது. இதுதவிர, முகூர்த்த நாட்கள், பண்டிகை காலத் தையொட்டி உள்ளூரில் தேவை அதிகரிக்கும்போதும் தங்கம் விலையில் உயர்வு காணப்படும்.
இதற்கிடையே, சர்வதேச அளவில் நேற்று தங்கம் விலையில் 2 சதவீத உயர்வு ஏற்பட்டது. சென் னையில் 22 கேரட் தங்கம் நேற்று முன்தினம் கிராம் ரூ.2,800-க்கும், ஒரு பவுன் ரூ.22,400-க்கும் விற்கப் பட்டது. நேற்று கிராமுக்கு ரூ.31 என பவுனுக்கு ரூ.248 உயர்ந்தது. இதனால், நேற்று ஒரு கிராம் ரூ.2,831-க்கும், ஒரு பவுன் ரூ.22,648-க்கு விற்கப்பட்டது.
சென்னை தங்கம், வைர வியாபாரிகள் சங்க பொதுச் செய லாளர் எஸ்.சாந்தகுமார் ‘தி இந்து’ விடம் இதுகுறித்து கூறும்போது, ‘‘டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. இதேபோல, சர்வதேச அளவில் தங்கம் விலையும் 2 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால், உள் ளூரிலும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கத்தில் முத லீடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், அடுத்த சில நாட்களில் தங்கம் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது’’ என்றார்.