அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் புதிதாக வரைவு விதிகள்: 10 நாட்களில் உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவு

அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் புதிதாக வரைவு விதிகள்: 10 நாட்களில் உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவு
Updated on
1 min read

ஆளுங்கட்சி ஆதரவாளர்களை அரசு வழக்கறிஞர்களாக நிய மனம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி புதிய வரைவு விதிகளை 10 நாளில் உருவாக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் வி.வசந்தகுமார், ஜி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில், ‘‘தமிழகம் மற்றும் புதுவையில் எந்தக்கட்சி ஆட்சிக்கு வருகிறதோ, அந்தக் கட்சி ஆதரவாளர்களே அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப் படுகின்றனர். அரசு வழக்கறிஞர் பதவி என்பது அரசியல் பதவி கிடையாது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் பதவியில் தொடங்கி மாவட்ட நீதிமன்றங்களில் நியமிக்கப்படும் அரசு வழக்கறிஞர்கள் வரை அனை வரும் ஆளுங்கட்சியின் சிபாரிசு பெற்றவர்களாகவே உள்ளனர். அரசு வழக்கறிஞர்களைத் தேர்வு செய்யும்போது நேர்மை யான, தகுதியான, திறமையான, அனுபவசாலிகளை வெளிப்படை யான தெரிவு மூலமாகவே தேர்வு செய்ய வேண்டும் என பல தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் வலியுறுத்தி யுள்ளது. ஆனால் அந்த உத்தரவுகள் எதுவும் முறையாக பின்பற்றப்படுவதில்லை. ஆகவே தகுதியானவர்களை அரசு வழக்க றிஞர்களாக நியமிக்க வேண்டும்’’ என அதில் கோரியிருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமார சுவாமி ஆஜ ராகி, இதுதொடர்பாக புதிதாக வரைவு விதிகளை உருவாக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதற்கு போதிய கால அவகாசம் தேவை’’ என்றார்.

அதற்கு நீதிபதிகள், ‘‘தலைமை வழக்கறிஞர் வேண்டு கோள் விடுப்பதைப் பார்த்தால் இப்பணியை முடிக்க இன்னும் சில மாதங்கள் ஆகும் போலத் தெரிகிறது. அதையேற்று அரசுக்கு கடைசி சந்தர்ப்பம் அளிக்கப் படுகிறது. எனவே 10 நாட்களில் இதுதொடர்பாக புதிய வரைவு விதிகளை உருவாக்கி, அதை இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞரிடம் அரசு ஒப்படைக்க வேண்டும். புதுச்சேரி அரசு உருவாக்கியுள்ள புதிய வரைவு விதிகள், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வி்ட்டது. உயர் நீதிமன்றத்திற்கு உதவும் வழக்கறிஞர், இந்த புதிய விதிகளை ஆய்வு செய்ய தனக்கு 2 வாரம் கால அவகாசம் தேவை எனக் கோரியுள்ளார். ஆகவே இந்த வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 13-க்கு தள்ளி வைக்கிறோம்’’ என உத்தர விட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in