

சென்னையில், நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்றக் கூடாது என்று வலியுறுத்தி திருநெல்வேலியில், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவரது ரசிகர்கள் 58 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
மாநகரில் ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த, மாநகர போலீஸ் தடை விதித்திருப்பதால் இப்போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். தடையை மீறி திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில், காமராஜர் சிலைமுன், சிவாஜி சமூக நல பேரவைத் தலைவர் கலைமணி தலைமையில், சிவாஜி ரசிகர்கள் திரண்டனர். காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த பின் ஆர்ப்பாட்டத்தை தொடங்கினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். காங்கிரஸ் விவசாயப் பிரிவு நிர்வாகி முத்துகுமார், பிரபு ரசிகர் மன்றத் தலைவர் பாலச்சந்தர் உள்பட 53 பேர் கைது செய்யப்பட்டனர்.