Published : 20 Nov 2014 10:40 AM
Last Updated : 20 Nov 2014 10:40 AM

தமிழகம் முழுவதும் சுற்றும் பிரச்சார வேன்: புதிய கட்சியை பிரபலப்படுத்த ஜி.கே.வாசன் அறிமுகம்

முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தொடங்கவுள்ள புதிய கட் சிக்கு ஆதரவு திரட்டும் விதமாக தமிழகம் முழுவதும் சுற்றும் பிரச் சார வேனை சென்னையிலிருந்து வாசன் நேற்று அனுப்பி வைத்தார்.

காங்கிரஸிலிருந்து விலகிய ஜி.கே.வாசன் புதுக்கட்சிக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். திருச்சியில் வரும் 28-ம் தேதி நடக்கும் மாநாட்டில் புதிய கட்சியை வாசன் முறைப்படி அறி விக்கிறார். இந்த மாநாட்டில் பங்கேற் பதற்காக வாசன் ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் பயணித்து சட்டமன்ற தொகுதிவாரியாக பொது மக்களிடமும், தொண்டர்களிடமும் பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் மக்கள் மத்தி யில் வாசனின் கட்சியை பிரபலப் படுத்தும் விதமாக பிரச்சார வேன் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வேனை சென்னை ஆழ்வார்ப் பேட்டையிலுள்ள தனது அலுவலகத் திலிருந்து நேற்று வழியனுப்பி வைத்த வாசன், கட்சியின் பிரச்சார பாடல்கள் அடங்கிய குறுந்தகடையும் வெளியிட்டார். நாளை நமதே என்ற வாசகம் எழுதப்பட்டிருந்த இந்த குறுந்தகடை திரைப்பட தயாரிப்பாளர் முக்தா னிவாசன் பெற்றுக் கொண்டார்.

பிரச்சார வேனில் உள்ள எல்.இ.டி. திரையில் அவரது தந்தை மூப்பனார், ஜி.கே.வாசன், அவர் ஆரம்பிக்கவுள்ள கட்சியின் குறிக்கோள்கள் குறித்து எந்நேரமும் தகவல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்.

இந்த நிகழ்ச்சியின் போது ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:

திருச்சியில் வரும் 28-ம் தேதி நடக்கவுள்ள மாநாட்டுக்கு மேடை அமைக்கும் பணிகள் தொடங்க வுள்ளன. மேலும் நாளை (இன்று) இதற்காக பந்தல் கால் நடப்பட வுள்ளது. எனவே திருச்சியில் நடக்கவுள்ள பொதுக்கூட்டத்துக்கு பொதுமக்களை அழைக்கும் விதமாக பிரச்சார வாகனத்தை அனுப்பி வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x