இயற்கை எரிவாயு திட்டத்தை தடை செய்ய வேண்டும்: இரா.முத்தரசன் வலியுறுத்தல்

இயற்கை எரிவாயு திட்டத்தை தடை செய்ய வேண்டும்: இரா.முத்தரசன் வலியுறுத்தல்
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுவாசல் பகுதியில் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, இத்திட்டத்தை தடை செய்ய வேண்டும் என விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வாணக்கன் காட்டில் எரிபொருள் சோதனை மேற்கொள்ள ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்ட இடத்தில் எண் ணெய் கொப்பளித்து வெளியேறு வதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து, மத்திய அரசு எரிவாயு எடுக்க அனுமதி அளித்துள்ள நெடுவாசலுக்குச் சென்றார். அங்கு எரிவாயு எடுக்க ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ள இடத்தைப் பார்வையிட்டதுடன், அப்பகுதி விவ சாயிகளின் கருத்துகளையும் கேட்டறிந்தார்.

பின்னர், அங்கு செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுத்தால், விளைநிலம் பாதிக்கப்படும் என விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது.

மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால் அத்திட்டத் துக்கு ஹைட்ரோ கார்பன் (இயற்கை எரிவாயு) என மத்திய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. மீத்தேன் திட்டத்துக்கு தடை விதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்ததைப்போல, இந்த திட்டத்தையும் தடை செய்ய வேண்டும்.

இங்கு எரிவாயு எடுத்தால், இப்பகுதியில் உள்ள விளை நிலங்கள் முற்றிலும் அழிந்துவிடும். விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் முடங்கிவிடும். எனவே, மத்திய அரசு உடனடியாக இத்திட்டத்தை கைவிட வேண்டும். மத்திய அரசு உடனடியாக இத்திட்டத்தை கைவிடாவிட்டால் இப்பகுதி மக்களை ஒன்றிணைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in