அரசுப் பள்ளி மாணவர்களின் கலை ஆர்வம்: தெர்மோகோலில் தத்ரூபமாக உருவாக்கிய மாமல்லபுர கடற்கரை கோயில்

அரசுப் பள்ளி மாணவர்களின் கலை ஆர்வம்: தெர்மோகோலில் தத்ரூபமாக உருவாக்கிய மாமல்லபுர கடற்கரை கோயில்
Updated on
1 min read

களிமண், தெர்மோகோலில் கலைப் படைப்புகளை உருவாக்கி அசத்தி வருகிறது புதுச்சேரி கிராமப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி. சாதாரணமாக சிறு பொம்மைகளை செய்து வந்த பள்ளி மாணவர்கள், தற்போது முதல்முறையாக 8 அடி உயர மாமல்லபுரம் கடற்கரை கோயிலை ஒருமாத உழைப்பில் உருவாக்கி உள்ளனர்.

புதுச்சேரி கிராமப் பகுதியான நெட்டப்பாக்கத்தில் உள்ளது கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி. இப்பள்ளியின் நுண்கலை ஆசிரிய ரான ராஜக்கண்ணன் மற்றும் இப்பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு கலைப் படைப்புகளை உருவாக்கி வருகின்றனர். ஓவியம் வரைதல், களிமண்ணில் சிறு பொம்மைகள் செய்தல் ஆகிய வற்றில் ஈடுபட்டு வந்தனர். தற் போது முதல் முயற்சியாக தெர் மோகோலில் பெரிய கலைப் படைப்பை வடிவமைத்துள்ளனர்.

இது தொடர்பாக நுண்கலை ஆசிரியர் ராஜக்கண்ணன் கூறும் போது, “பிளைவுட் பலகையில் கடற்கரை கோயில் படத்தை வரைந்து அதன் மேல் கோயில் கோபுர சிற்பங்களை தனித்தனி யாக தெர்மோகோலில் உருவாக்கி னோம். அதை பலகையில் பசை யால் ஒட்டினோம். பின்னர் காகிதங்களை வெட்டி பகுதி, பகுதியாக வடிவமைத்தோம்.

ஒரு மாத உழைப்பு

ஒரு மாதத்தில் 20 மாணவர் களுடன் இணைந்து இப்படைப்பை உருவாக்கினோம். தற்போது வண்ணம் பூசி மெருகேற்றி யுள்ளோம்.

இந்த தெர்மோகோல் கலைப் படைப்பு 8 அடி உயரம், 6 அடி அகலம் உடையது. வீணாக தூக்கி எறியும் பொருட்களில் இருந்தும் எங்கள் பள்ளிக் குழந்தைகள் கலைப் படைப்புகளை உருவாக்கு வார்கள். நமது கலைப்பொக்கி ஷங்கள் மீதான விழிப்புணர்வை குழந்தைகளுக்கு ஏற்படுத்தவே இக்கடற்கரை கோயிலை வடி வமைத்தோம். அடுத்து வேறு படைப்புகளையும் உருவாக்க உள்ளோம்” என்றார்.

பள்ளியின் துணை முதல்வர் ராமு கூறும்போது, “எங்கள் பள்ளியில் அனைவருமே கிராமப் பகுதி மாணவ, மாணவிகள். கற்பனைத்திறன் அதிகம் இருப்ப தால் ஒரு பொருளை பார்த்து விட்டால் அதேபோல் உருவாக்கும் திறனுடையவர்கள். அவர்களுக்கு இது மகிழ்வான அனுபவம்” என்றார்.

மாணவர்கள் உற்சாகம்

மாணவ, மாணவிகள் கூறும் போது, “எங்கள் பள்ளியில் படைப் பாற்றலை ஊக்குவிக்கும் வகை யில் ஓவியம் வரைய, சிற்பம் வடிவமைக்க கற்றுத் தருகின்றனர். முதல்முறையாக மாமல்லபுரம் கடற்கரை கோயிலை 8, 9-ம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியருடன் இணைந்து உருவாக்கினோம். இப்படைப்பை உருவாக்கிய பிறகு அதில் எங்கள் பங்கும் இருக்கிறது என்பதை நினைத்தாலே சந்தோஷ மாக இருக்கிறது” என்றனர்.

மாணவர்களுக்கு கல்வி யோடு செயல்வழி கற்றல், படைப்பாக்கத்தைத் தூண்டும் கற்றல் மிக அவசியம் என்பதை சில பள்ளிகள் உணரத் தொடங்கி மாற்றுப் பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கின்றன. அதில் ஒன்று புதுச்சேரி - நெட்டப் பாக்கத்தில் உள்ள இந்த கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in