

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் கைகளை வெட்டு வேன் எனக்கூறியதாக சொல்லப் பட்ட புகாரில் அதிமுக தென் சென்னை மாவட்டச் செயலாள ருக்கு உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் அளித்து நேற்று உத்தரவிட்டது.
அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவிற்கு எதிராக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கூறிய கருத்துகளுக்கு, அதிமுகவின் தென் சென்னை மாவட்டச் செயலாளரான வி.பி.கலைராஜன் எதிர்ப்பு தெரிவித்து பேட்டியளித்தார். அப்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கைகளை வெட்டுவேன் என்று அவருக்கு மிரட்டல் விடுத்ததாக புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக தேனாம் பேட்டை போலீஸார் முன்னாள் முதல்வருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறி வி.பி.கலைராஜன் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் தனக்கு முன்ஜாமீன் கோரி வி.பி.கலைராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி வி.பாரதி தாசன் முன்பு நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மாவட்டச் செயலாளர் வி.பி.கலைராஜனுக்கு நிபந்தனையோடு முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.