

உடுமலை சங்கர் கொலை வழக்கு விசாரணை ஜூலை 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் குமரலிங்கத்தை சேர்ந்த சங்கர் (22), கவுசல்யாவை காத லித்து மணந்தார். இந்நிலையில், கடந்த மார்ச் 13-ம் தேதி, உடுமலை யில் சங்கர் படுகொலை செய்யப் பட்டார், கவுசல்யா படுகாயம் அடைந்தார்.
சங்கர் கொலை வழக்கு தொடர் பாக, கவுசல்யாவின் தந்தை சின்னச் சாமி, தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை, மற்றும் எம்.மணி கண்டன், எம்.மைக்கெல் (எ) மதன், பி.செல்வக்குமார், பி.ஜெக தீசன், தன்ராஜ், தமிழ் கலை வாணன், கல்லூரி மாணவர் பிரசன்னா, மற்றொரு மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், 9 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன் றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கின் முக்கியத்து வத்தை கருத்தில் கொண்டு 4 சிறப்பு வழக்கறிஞர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில், சிறப்பு நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் சாட்சி விசாரணை நேற்று தொடங்கியது.
அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக் கறிஞர்கள் குழுவைச் சேர்ந்த சங்கர நாராயணன், எஸ்.ரூபன், ஆர்.செந்தில்குமார், ஜி.ராஜசேக ரன் ஆகியோர் ஆஜராகினர். கவுசல்யா மற்றும் கொலையை நேரில் பார்த்த சாட்சியான வேணுகோபால் ஆகியோர் நீதிமன்றத்துக்கு அரசு தரப்பில் அழைத்துவரப்பட்டனர்.
வழக்கறிஞர்கள் போராட்டம் மற்றும் கொலை வீடியோ காட்சிப் பதிவுகள் அரசு தரப்பு சார்பில், எதிர்தரப்புக்கு வழங்கவில்லையாம். இதனால், விசாரணை தொடங்கவில்லை. இந்நிலையில், வழக்கு விசாரணையை ஜூலை 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அலமேலு உத்தரவிட்டார்.