

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி யில் உள்ள அன்னை ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுப் பெரு விழா இன்று (திங்கள்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கு கிறது. இதையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக வேளாங்கண் ணிக்கு வந்துள்ளனர்.
கிறிஸ்தவர்களின் புனித தல மான வேளாங்கண்ணியில் ஆண் டுப் பெருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பெருவிழா இன்று மாலை கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது. பேராலய வளாகத்தில், தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், திருக்கொடியை புனிதம் செய்வித்து, கொடியேற்றி வைக்கிறார்.
இதில் பங்கேற்பதற்காக, சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக வேளாங் கண்ணிக்கு வந்துள்ளனர். பக்தர் கள் தங்குவதற்காக பல்வேறு இடங்களில் பந்தல்கள் அமைக்கப் பட்டு, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விழாவையொட்டி, போலீஸார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று முதல் தினமும் பல மொழிகளில் கூட்டுத்திருப்பலி, தேர் பவனி, நற்செய்தி அறிவிப்பு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி செப்டம்பர் 7-ம் தேதி நடைபெறுகிறது. இதில், உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி, வெளிநாட்டு பக்தர்களும் பங்கேற் பார்கள். செப்டம்பர் 8-ம் தேதி கொடி இறக்கத்துடன் விழா நிறை வடைகிறது.
திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, தஞ்சாவூர், பூண்டிமாதா கோயில், ஓரியூர், பட்டுக்கோட்டை, சிதம்பரம், புதுச்சேரி, சென்னை, காரைக்கால், நாகூர், நாகப்பட்டி னம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப் பட்டு வருகின்றன.