மைசூர் பூங்காவில் இருந்து வண்டலூர் வந்த ஓநாய்

மைசூர் பூங்காவில் இருந்து வண்டலூர் வந்த ஓநாய்
Updated on
1 min read

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு ஆண் இந்திய ஓநாய் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

விலங்குகள் பரிமாற்ற முறையில் மைசூரு உயிரியல் பூங்காவில் இருந்து, வசந்தன் என்ற ஆண் இந்திய ஓநாய் வண்டலூர் பூங்கா வுக்கு நேற்று (சனிக்கிழமை) கொண்டு வரப்பட்டது. இதன் வயது 7 மாதங் கள். இத்துடன் சேர்த்து வண்டலூர் பூங்காவில் இந்திய ஓநாய்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள் ளது. இந்த விலங்கை பார்வையாளர் கள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

இந்திய ஓநாய்கள், நாய்கள் குடும்பத்தைச் சேர்ந்த விலங்காகும். இந்த குடும்பத்தைச் சேர்ந்த ஓநாய், நரி, சிவப்பு குள்ள நரி, இந்திய குள்ள நரி மற்றும் செந்நாய் ஆகிய 5 இனங்கள் இந்தியாவில் உள்ளன. இந்த இனங்கள் அனைத்தும் தோற் றத்தில் ஒரே மாதிரியாக இருந்தா லும், நிறம், அளவு, நீளம், முடி ஆகியவற்றை வைத்து வேறுபடுத்தப் படுகின்றன. இவற்றில் நரி மட்டும் இந்தியா முழுவதும் அனைத்து வாழ்விடங்களிலும் வாழ்வதற்கு தன்னை சிறப்பாக தகவமைத்துக் கொண்டுள்ளன.

வேளாண்மை, மனித குடியேற்றங் கள் காரணமாக இந்திய ஓநாய்களின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு, அவற் றின் இரை விலங்குகளின் எண் ணிக்கை வெகுவாக குறைந்து விட் டது. இதனால் இந்த விலங்குகள் வேறு வழியின்றி ஆடு போன்ற கால்நடைகளை வேட்டையாடுகின் றன. ஓநாய்கள் அழிவதால், அதன் இரை விலங்குகளான மான் போன்றவை பெருகி, விளை நிலங்களை அழிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in