

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் சார்பில் ஜுன் 7-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில், தமிழக அரசுக்கும், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமைக்கும், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கும் சூரிய ஒளி மேற்கூரை திட்டங்களுக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விருதுகளை மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, சனிக்கிழமை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எம்.சாய்குமார், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மங்கத் ராம் சர்மா ஆகியோர் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.