காவிரிக்காக குரல் கொடுக்காத நடிகர்கள்: ரசிகர் மன்றங்களை கலைக்க கொமதேக வலியுறுத்தல்

காவிரிக்காக குரல் கொடுக்காத நடிகர்கள்: ரசிகர் மன்றங்களை கலைக்க கொமதேக வலியுறுத்தல்
Updated on
1 min read

காவிரி பிரச்சினைக்காக தமிழகத்தில் உள்ள எந்த நடிகரும், இதுவரை ஒரு கண்டன அறிக்கையைக்கூட வெளியிடவில்லை. எனவே ரசிகர் மன்றங்களை கலைக்க வேண்டும் என கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி யின் (கொமதேக) திருப்பூர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் திருப்பூரில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் நிருபர்களிடம் கூறிய தாவது:

காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவில் நடந்து வரும் சம்பவங்கள், வேதனை அளிக்கிறது. கர்நாடக அரசு போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஊக்கப்படுத்தி வருகிறது. பதிலுக்கு, தமிழர்களும் போராட்டத்தில் ஈடுபட்டால் இந்திய ஒருமைப்பாடு என்ன ஆகும் என, மத்திய அரசு யோசிக்க வேண்டும்.

கர்நாடகாவில் போராட்டக்காரர்களு டன், நடிகர்களும் இணைந்து தமிழகத் துக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என போராடி வருகிறார்கள். ஆனால், தமிழகத்தில் உள்ள எந்த நடிகரும், இதுவரை ஒரு கண்டன அறிக்கையைக்கூட வெளியிடவில்லை. தமிழகத்தில் உள்ள சினிமா ரசிகர் மன்றங்களை கலைக்க வேண்டும்.

அவிநாசி- அத்திக்கடவு திட்டத்துக் கான பூர்வாங்கப் பணிகள் தொடங்க, ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரி வித்துள்ளது. நீதிமன்றத்தில் தற்போது சொல்லியுள்ளதைப் பார்த்தால், இத்திட்டம் நிறைவேறுமா? என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது. இத்திட்டத்துக்காக மத்திய அரசு ஒப்புதல் பெற, ஒரு வாரம் போதும். ஆனால், ஒன்றரை ஆண்டுகள் இழுத் தடிப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in