Published : 06 Feb 2014 12:00 AM
Last Updated : 06 Feb 2014 12:00 AM

மனு அளித்த 60 நாளில் குடும்ப அட்டை

மனு அளித்த 60 நாட்களில் குடும்ப அட்டை தகுதியின் அடிப்படையில் வழங்க வேண்டும் என்றும் மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணத்தை மனுதாரரிடம் தாமதமின்றி தெரிவிக்க வேண்டும் என்றும் துறை அலுவலர்களை உணவுத்துறை அமைச்சர் ரா.காமராஜ் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக தமிழக அரசின் செய்தி வெளியீட்டில் மேலும் கூறியிருப்பதாவது:

உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மயிலாப்பூர் உதவி ஆணையாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டபோது புதிய குடும்ப அட்டை வழங்கக் கோரியும் முகவரி மாற்றத்துக்கான மனுக்களும் பெறப்பட்டன.நுகர்வோர் மற்றும் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க மண்டல உதவி ஆணையாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் சேப்பாக்கத்தில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் அலுவலகத்தில் இயங்கும் புகார் பிரிவை கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.குறுஞ்செய்தி அனுப்ப- 94454 64748. இணைப்பு தொலைபேசி-72990 08002.

ஆய்வு மேற்கொண்ட போது, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் சூ.கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் எம்.சந்திரசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x