

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் திடீர் திருப்பமாக, இவ்வழக்கில் தொடர்புடைய மெடோ அக்ரோ ஃபார்ம் நிறுவனம் சார்பில் வெள்ளிக்கிழமை புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது வழக்கை தாமதப்படும் நட வடிக்கை என திமுக வழக்கறிஞர் தாமரைச் செல்வன் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா,வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் இள வரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்குவந்தது.
அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரும் மனுவை ஜெயலலிதா, சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப் பட்டது. இவற்றை அவற்றை அரசு வழக்கறிஞர் ஆட்சேபிக்காததால் நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
கடந்த 27-ம் தேதி ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை தொடங்கியது.
இம்மனுவுக்கு அரசு வழக்கறி ஞர் பவானி சிங் வெள்ளிக் கிழமை 2 பக்க பதில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து இந்த மனு மீதான தீர்ப்பை பிப்ரவரி 3-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதைத் தொடர்ந்து இவ்வழக் கில் தொடர்புடைய மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான சண்முகம் புதிய மனு தாக்கல் செய்தார். இதனால் இறுதி விசாரணை பிப்.3-ல் நடக்காது என தெரிகிறது.