

தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
வட தமிழகத்திலும் புதுச்சேரியிலும் வறண்ட வானிலையே நிலவும். தமிழகத்துக்கு மழை தரக்கூடிய வடகிழக்கு பருவ மழையின் மேகங்கள் சோமாலிய நாட்டு பக்கம் நகர்ந்து விட்டதால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும்.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரை முடிந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் எந்த இடத்திலும் மழை பதிவாகவில்லை. இன்னும் ஒரு சில நாட்களுக்கு இதே நிலை தொடரும். சென்னையில் வானம் சற்று மேக மூட்டத்துடன் காணப்படும். அடுத்த 24 மணி நேரத்துக்கு குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரியாகவும், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரியாகவும் இருக்கும்.