

சசிகலா புஷ்பா எம்.பி., அவரது கணவர் ஆகியோர் கொலை மிரட் டல் விடுத்து, பாலியல் துன்புறுத்தல் புகாரை வாபஸ் பெறவைத்ததாக அவரது வீட்டில் வேலை செய்த பெண், டிஜிபி அலுவலகத்தில் புதிய புகார் கொடுத்துள்ளார்.
நெல்லை மாவட்டம் ராதா புரத்தை சேர்ந்த ஒரு இளம்பெண், சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
சென்னை அண்ணா நகர் மற்றும் தூத்துக்குடியில் உள்ள சசிகலா எம்.பி.யின் வீடுகளில் வேலை செய்தேன். அப்போது, என்னையும் என் அக்கா ஜான்சி ராணியையும் சசிகலா புஷ்பா, அவரது கணவர், அவரது உறவினர் ஆகியோர் கொடுமை செய்து பாலியல் ரீதியாக துன்புறுத்தினர். இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தேன். போலீஸாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், புகாரை வாபஸ் வாங்குமாறு சசிகலா புஷ்பா கடந்த மாதம் 20-ம் தேதி கூறினார். மறுத்தால் கொலை செய்து விடுவதாக அவர், கணவர் மற்றும் உடன் இருந்தவர்கள் மிரட்டினர். நான் பயந்துபோய், அவர்கள் கொடுத்த வெள்ளைத் தாளில் கையெழுத்து போட்டேன்.
இந்நிலையில், என்னை யாரோ கடத்திவிட்டதாக திசையன்விளை காவல் நிலையத்தில் என் அக்கா ஜான்சிராணி புகார் கொடுத்துள்ளார். சசிகலா புஷ்பா மிரட்டிய தாலேயே, அவர் இவ்வாறு புகார் கொடுத்திருக்கிறார். என்னை யாரும் கடத்தவில்லை. நானாகத் தான் சென்னை வந்தேன். எனக்கோ, குடும்பத்தினருக்கோ உயிருக்கு பங்கம் நேர்ந்தால் சசிகலா புஷ்பாவும், அவர்களை சார்ந்தவர்களும்தான் பொறுப்பு. கொலை மிரட்டல் விடுத்து, புகாரை வலுக்கட்டாயமாக வாபஸ் பெற முயற்சி செய்த சசிகலா புஷ்பா, அவரது கணவர் மற்றும் உடந்தை யாக இருந்தவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.