Published : 02 Feb 2014 11:00 AM
Last Updated : 02 Feb 2014 11:00 AM

கேஜ்ரிவாலை கண்டித்து 5-ம் தேதி காங். ஆர்ப்பாட்டம்: ஞானதேசிகன் அறிவிப்பு

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக வரும் 5-ம் தேதி சென்னை மற்றும் மாவட்டத் தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்த ஜனநாயகத்தில் துரதிர்ஷ்டவசமாக, பொறுப்பற் றவர்கள்கூட முதல்வராக வர முடியும் என்பதற்கு எடுத்துக்காட்

டாக விளங்கும் அர்விந்த் கேஜ்ரிவால், எங்கள் இளம் தலைவர் ராகுல் காந்தி, நிதியமைச் சர் ப.சிதம்பரம் மற்றும் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியிருக்கிறார்.

எல்லோரையும் ஊழல்வாதி கள் என்று சொல்வதன் மூலம், தான் ஒரு புனிதன் என்று மக்கள் நினைக்க வேண்டும் என்ற பாவனையில் கேஜ்ரிவால் அரசு நடத்துகிறார். காங்கிரஸ் ஆதரவோடு டெல்லியில் ஆட்சி நடத்தும் கேஜ்ரிவால், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்ற முடியாமல், எப்படியாவது பதவியை விட்டு போக வேண்டும் என்று துடிக்கிறார். காங்கிரஸ் கட்சி ஆதரவை விலக்கிக் கொண்டால் நிம்மதியாக பழியை காங்கிரஸ் மீது போட்டு தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில்தான் டெல்லி தெருக்களிலே ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

ஒரு முதல்வர், பொறுப்பற்ற முறையில் ஆதாரங்கள் ஏதும் இல்லாமல் வழிப்போக்கர் போல, இப்படி புழுதியை வாரித் தூற்றுவது என்பது ஜனநாயகத்துக்கு ஏற்புடைய தல்ல. அர்விந்த் கேஜ்ரிவாலைக் கண்டித்து, சென்னையில் 5-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட் டம் நடத்தப்படும். மற்ற மாவட் டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட் டங்கள் நடக்கும்.

இவ்வாறு அறிக்கையில் ஞானதேசிகன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x