குறைவான சம்பளம், அதிக வேலைப்பளு உட்பட காவல் துறையினரின் பிரச்சினைகளை தீர்க்க முதல்வர் முன்வருவாரா? - திமுக தலைவர் கருணாநிதி கேள்வி

குறைவான சம்பளம், அதிக வேலைப்பளு உட்பட காவல் துறையினரின் பிரச்சினைகளை தீர்க்க முதல்வர் முன்வருவாரா? - திமுக தலைவர் கருணாநிதி கேள்வி
Updated on
2 min read

குறைந்த சம்பளம், அதிக வேலை நேரம், காலிப் பணியிடங் கள் நிரப்பப்படாததால் கூடுதல் வேலைப்பளு என்று தவிக்கும் தமிழக காவலர்களின் பிரச்சினை களை தீர்க்க முதல்வர் ஜெயல லிதா முன்வருவாரா என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

மக்கள் பணிக்காக தங்களையே அர்ப்பணித்து பணியாற்றும் காவல்துறைக்காக திமுக ஆட்சி யில் எண்ணற்ற சலுகைகள், நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. காவல்துறையின் பிரச்சினைகளை ஆய்வு செய்ய ஒரு ஐசிஎஸ், 3 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்த குழுக்களின் பரிந்துரைக ளில் பெரும்பாலானவை ஏற்கப் பட்டன. சிறப்பாக பணிபுரியும் காவலர்களுக்கு பதக்கங்களை அறிமுகப்படுத்தியது திமுக அர சுதான்.

குறைவான சம்பளம்

தற்போதைய ஆட்சியில் காவலர்களின் நிலை மோசமாக உள்ளது. நாட்டிலேயே காவலர் முதல் துணை கண்காணிப்பாளர் வரை மிகக் குறைவான ஊதியம் பெறுவது தமிழக காவல்துறை யினர்தான் என்று புள்ளி விவ ரங்களுடன் செய்திகள் வெளி யாகியுள்ளன. தெலங்கானாவில் காவலரின் தொடக்க ஊதியம் ரூ.16,400, கர்நாடகத்தில் ரூ.11,600, கேரளத்தில் ரூ.10,480, ஆந்திரத் தில் ரூ.8,440. தமிழகத்திலோ காவலரின் தொடக்க ஊதியம் ரூ.5,200 மட்டுமே. தெலங்கானா காவலரின் ஊதியத்தில் மூன்றில் ஒரு பகுதிதான் தமிழக காவலரின் ஊதியம். காவல் ஆணையர்கள், துணை கண்காணிப்பாளர்களுக் கும் தெலங்கானா, ஆந்திரம், கேரளம், கர்நாடகத்தைவிட தமிழ கத்தில்தான் குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது.

தமிழக காவலர் ஒருவரிடம் வேலைப்பளு பற்றி கேட்டபோது, ‘‘காவலர் ஒரு நாளுக்கு 8 மணி நேரத்துக்கு மேல் பணியாற்றக் கூடாது என்று விதிகள் உள்ளன. எனினும், பல காவலர்கள் 24 மணிநேரப் பணி என வாரம் முழுவதும் பணியாற்றுகின்றனர். முதல் நாள் இரவு தாமதமாக வீடு திரும்பினாலும், மறுநாள் காலை 7 மணி அணிவகுப்புக்கு காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டி உள்ளது. இத்தகைய நெருக்கடி யாலும், குறைவான ஊதியத்தா லும், காவல் துறையின் இளைஞர் படையில் கடந்த ஆண்டு பணியில் சேர்ந்த 11,000 பேரில் 2,674 பேர் விலகிவிட்டனர்’’ என்றார்.

இந்த ஆட்சியில் காவல் துறையில் உள்ள காலிப் பணியி டங்கள் நிரப்பப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. காவல் துறையினரின் மொத்த அனுமதிக் கப்பட்ட இடங்கள் 1 லட்சத்து 21 ஆயிரத்து 14. அதில் 19 ஆயி ரத்து 157 இடங்கள் காலியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. காலிப் பணியிடங்களை நிரப்பு மாறு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியே உத்தரவிட் டபோதிலும், அந்த இடங்கள் நிரப்பப்படவில்லை. காவல் துறை அதிகாரிகள், ஓய்வு பெற்ற அதி காரிகளின் வீடுகளில்கூட ‘ஆர்டர் லி’ என்ற பெயரால் காவல் துறையினர் பணியாற்றும் போக்கு இன்னமும் தொடருகிறது.

பாதிக்கப்படும் பொதுமக்கள், ஆதிக்கம் செலுத்தும் மேலதிகாரி கள், இன்னலுறும் குடும்பத்தினர் என்ற முக்கோணத்துக்குள் சிக்கித் தவிக்கும் சாதாரண நிலைக் காவல் துறையினரை அரசு, காக்கும் கரங்களாக இருந்து அரவணைத்து, கடமையாற்ற அனுமதிக்க வேண்டும்.

தமிழக காவல்துறையை கையில் வைத் திருக்கும் முதல்வர் ஜெயலலிதா, பிரச்சி னைகளில் இருந்து காவல் துறையினரை மீட்டு, அவர்களைப் பாதுகாக்க முன்வருவாரா?

இவ்வாறு கருணாநிதி தெரி வித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in