

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை அதிமுக (அம்மா) அணி பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா ஆதரிப்பதாக அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேறக் கழகத்தின் (அம்மா) நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் மற்றும் தோழமைக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பார்கள் என்பதை அதிமுக (அம்மா) பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா ஆணைப்பட்டி மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.