

விவசாயிகளின் எதிர்பார்ப்பின்படி அவிநாசி - அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றப்படும் என போராட் டக் குழு மகளிர் அமைப்பிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம் முதல்வர் எடப்பாடி பழனி சாமி, நேற்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு அதிமுகவினரும், பொதுமக்களும் வரவேற்பு அளித்தனர். அப்போது, அவிநாசி - அத்திக்கடவு திட்ட போராட்டக் குழுவைச் சேர்ந்த அத்திக்கடவு வேலுநாச்சியார் பேரவை பெண்கள் முதல்வரிடம் அளித்த மனுவில், ‘அவிநாசி- அத்திக்கடவு திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்’ என வலியுறுத்தினர்.
முதல்வர் கூறும்போது, ‘‘அவி நாசி - அத்திகடவு திட்டமானது ஜெயலலிதா இருக்கும்போதே சட்டப்பேரவையில் அறிவிக்கப் பட்ட திட்டமாகும். அவரது வழி யைப் பின்பற்றி அத்திட்டத்தை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி கோவைக்குவந்தபோதும் இத்திட்டம் தொடர்பாக அவரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 2 வழி களில் இத்திட்டத்தை நிறைவேற்று வது தொடர்பாக அரசின் கவ னத்துக்கு கொண்டுவரப்பட் டுள்ளது. எனவே, விவசாயிகள் எதிர்பார்ப் புக்கு ஏற்ப இத்திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும்’’ என்றார்.
இதைத் தொடர்ந்து சேலத் துக்கு கார் மூலம் முதல்வர் புறப் பட்டுச் சென்றார். அவரது வரு கையையொட்டி கோவை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
வேலுநாச்சியார் இயக்க உறுப் பினர் கவுரி கூறும்போது, ‘‘பல்லா யிரக்கணக்கான மக்களின் வாழ் வாதாரமாக இருக்கும் அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறை வேற்றுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்துள்ளது நம்பிக்கை அளிப் பதாக உள்ளது’’ என்றார்.