

தேமுதிக தொழிற்சங்க பேரவைக்கு புதிய செயலாளரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் நியமித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிவிப்பில், ''தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவையின் செயலாளராக ஜி.காளிராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொழிற்சங்க நிர்வாகிகள், மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.