

காவல்துறை தரப்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
சென்னை அண்ணா நகர் 11-வது தெரு, வி-பிளாக்கில் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் பணம், 175 பவுன் திருடப்பட்டது தெரியவந்தது.
தனிப்படை விசாரணையில் வீட்டின் உரிமையாளர் லட்சுமண சாமியின் வீட்டுக்கு அருகே இருந்த சிசிடிவி கேமரா காட்சியைக் கொண்டு எண்ணூர் சுனாமி நகரில் இருந்த வேளாங்கண்ணி (27), பெரிய நதியா (23), செல்வி (30), சீதா (35), 18 வயதுக்கு உட்பட்ட 3 சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமி என மொத்தம் 8 பேர் கைது செய் யப்பட்டனர். 75 பவுன் மீட்கப் பட்டுள்ளது. மேலும் 2 பேரை தனிப்படை தேடி வருகின்றனர்.