

கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் பதவியில் 17 காலியிடங்களையும், தொழில் வணிகத்துறை மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறையில் ஸ்டோர் கீப்பர் பணியில் 20 காலிப்பணியிடங்களையும் நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி கடந்த 17.5.2013 அன்று அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டது. ஏறத்தாழ 25 ஆயிரம் பேர் தேர்வெழுதினர்.
இந்த நிலையில், தேர்வு நடந்து முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் முடிவு வெளியிடப்படாததால் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தேர்வெழுதிய மாணவர்கள் கூறுகையில், “லட்சக்கணக்கானோர் தேர்வெழுதியிருந்தால் முடிவு வெளியிட கால தாமதம் ஆவது ஏற்கக் கூடியது. ஆனால் குரூப்-3 தேர்வை சுமார் 25 ஆயிரம் பேர் மட்டுமே எழுதியுள்ளனர். எனவே தேர்வு முடிவை எப்போதோ வெளியிட்டிருக்கலாம். இனியும் காலதாமதம் செய்யாமல் தேர்வு முடிவை விரைவாக வெளியிட வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி-க்கு கோரிக்கை விடுக்கிறோம்” என்று தெரிவித்தனர்.