

தேமுதிக மற்றும் தமாகா கட்சிகள் கூட்டணியிலிருந்து விலகினால் ம.ந.கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.
தேர்தல்களை தனியாக சந்திக் கும் அளவுக்கு தமாகாவை பலப் படுத்தும் நடவடிக்கைகளில் ஈடு படுவோம் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று கூறினார். இதையடுத்து, ம.ந.கூட்டணியி லிருந்து தமாகா விலகவுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இது தொடர்பாக ம.ந.கூட்டணி யில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதாவது:
தேமுதிகவும், தமாகாவும் மக்கள் நலக்கூட்டணியின் அங்கம் கிடையாது. மக்கள் நலக்கூட்டணி யில் விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம் கட்சிகள் மட்டுமே உள்ளன. எங்கள் அணியோடு, தேமுதிகவும், தமாகாவும் தேர்தலுக்காக தொகுதி உடன்பாடு மட்டுமே செய்து கொண்டன.
எனவே, உள்ளாட்சித் தேர்த லில் அவர்கள் எப்படி போட்டியிட வேண்டும் என்று முடிவெடுப்பது அவர்களின் உரிமை. தேமுதிகவும், தமாகாவும் விலகி னால் மக்கள் நலக்கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதே நேரத்தில், உள்ளாட்சித் தேர்தலில் பின்பற்றும் யுக்தியை அவர்கள் நாடாளுமன்றத் தேர்தலிலும் பின் பற்றக்கூடாது என்பது எங்கள் விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.