100 அடி ஆழம் தோண்டி மீட்கப்பட்ட சிறுவனின் உடல் பாகங்கள்- ரூ. 9 லட்சம் செலவு செய்த போலீஸ்

100 அடி ஆழம் தோண்டி மீட்கப்பட்ட சிறுவனின் உடல் பாகங்கள்- ரூ. 9 லட்சம் செலவு செய்த போலீஸ்
Updated on
1 min read

கோவையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான சிறுவன் கொன்று கிணற்றுக்குள் புதைக்கப்பட்ட வழக்கில், மூடப்பட்ட 100 அடி ஆழ கிணற்றை ரூ.9 லட்சம் செலவு செய்து தோண்டி உடல் பாகங் களை போலீஸார் வியாழக்கிழமை மீட்டனர். சில உடல் பாகங்களை மீட்பதற்காக மேலும் தோண்டி வருகின்றனர்.

கோவை கணபதி காந்தி மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேவியர். இவரது மகன் ஃபெர்னாண் டர்ஸ் (15). இவர், கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் மாயமானார். இது குறித்து சரவணம்பட்டி போலீஸார், கடந்த 2010-ஆம் ஆண்டு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த செளந்தரராஜன் (27), சேகர் (எ) விஸ்ணுசேகர் (27) ஆகியோர் ஃபெர்னாண்டர்ஸை கொலை செய்தது கண்டறியப்பட்டது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஃபெர்னாண்டர்ஸ், கஞ்சா தர மறுத்ததால் பிளேடால் வெட்டி கொலை செய்து, சடலத்தை கணபதி தங்கம்மாள் நகர் பகுதியில் உள்ள வறண்ட கிணற்றில் புதைத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தன.

ஃபெர்னாண்டர்ஸ் கொலையை அறிந்த ஆறுமுகம் என்பவரை செளந்தரராஜன், கடந்த டிசம்பர் மாதம் கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது பிடிபட்ட அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை யில் ஃபெர்னாண்டர்ஸ் கொலை குறித்த தகவல்கள் தெரிய வந்தது.

ஃபெர்னாண்டர்ஸின் சடலம் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் கிணற்றை நிலத்தின் உரிமையாளர் மூடி விட்டார். கிணற்றை தோண்டுவதற்கு தேவையான நிதிக்காக போலீஸார் காத்திருந்தனர். அண்மையில் கிணற்றை தோண்டுவதற்கான நிதியை அரசு ஒதுக் கியது. இதையடுத்து, கடந்த ஜனவரி 12-ம் தேதி முதல் கிணற்றை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

சுமார் 20 அடி தோண்டியபோதே நீர் பெருக் கெடுத்தது. இதையடுத்து, மோட்டாரை வைத்து நீரை வெளியேற்றி, பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

தற்போது, 100 அடி ஆழம் தோண்டியுள்ள நிலையில் சிறுவனின் சில எலும்புகள் வியாழக்கிழமை மீட்கப்பட்டன. மேலும், சில எலும்புகள் மீட்கப்பட வில்லை. இதையடுத்து, போலீஸார் உடல் பாகங்களை தொடர்ந்து தேடி வருகின்றனர். வெள்ளிக்கிழமை முழு உடல் பாகங்களும் மீட்கப்படும் என தெரிவித்தனர்.

கிணற்றிற்குள் புதைக்கப்பட்ட சடலத்தை வெளியே எடுப்பதற்காக இதுவரை ரூ. 9 லட்சம் செலவிட்டுள்ளதாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in