

திருமுல்லைவாயிலில் ராகவேந்திரா கோயில் அமைந்துள்ளது. திரைப்பட நடிகர் மற்றும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் கட்டியுள்ள இந்த கோயிலின் 8-ம் ஆண்டு விழா மற்றும் புத்தாண்டு விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில், நடிகர் ராகவா லாரன்ஸ் ஆதரவற்ற குழந்தைகளோடு பங்கேற்று புத்தாண்டை கொண்டாடினார். பொதுமக்களுக்கு மரக்கன்று களை வழங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரி வித்ததாவது:
ஏற்கெனவே 260 ஆதரவற்ற, ஏழை, எளிய குழந்தைகளைப் படிக்க வைத்து வரும் நிலையில், புதிய ஆண்டில் 500 குழந்தை களை படிக்க வைக்க திட்டமிட்டுள் ளேன். 131 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சைக்கு உதவி யுள்ளேன். வெளியிட முடி யாத சூழலில் உள்ள ‘மொட்டை சிவா கெட்ட சிவா’ திரைப்படமும், வெளிவரத் தயாராக உள்ள ‘சிவலிங்கம்’ திரைப்படமும் இந்தாண்டு வெளியாகும் என்று அவர் தெரிவித்தார்.