பள்ளி வளாகத்தில் பாடப் புத்தகம், நோட்டு, ஷூ, சீருடை விற்கக் கூடாது: சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு திடீர் உத்தரவு

பள்ளி வளாகத்தில் பாடப் புத்தகம், நோட்டு, ஷூ, சீருடை விற்கக் கூடாது: சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு திடீர் உத்தரவு
Updated on
1 min read

பொதுவாக, தனியார் பள்ளி களில் மாணவர்களுக்கு தேவை யான புத்தகங்கள், நோட்டுகள், பென்சில், பேனா, சீருடை, ஷூ போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படும். சிபிஎஸ்இ பள்ளி களிலும் இந்த வழக்கம் காணப்படு கிறது.

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோரிடமிருந்து சிபிஎஸ்இ தலைமை அலுவலகத்துக்கு ஏராள மான புகார்கள் வந்தன. அதன் அடிப் படையில் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் தலைமை அலுவ லகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை யில் கூறப்பட்டு இருப்பதாவது:

பள்ளி வளாகத்தில் பாடப் புத்தகங்கள், நோட்டுகள், எழுதுபொருட்கள், சீருடை, ஷூ, புத்தகப்பை போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதும் அவற்றை வாங்கச் சொல்லி பெற் றோரை நிர்ப்பந்திப்பதும், குறிப் பிட்ட பிராண்ட் பொருட்களை விற் பனை செய்வதும் ஆரோக்கியமான நடைமுறை அல்ல. இதுபோன்ற செயல்களில் சிபிஎஸ்இ பள்ளிகள் ஈடுபடக் கூடாது. பள்ளி என்பது கல்விப் பணி நடைபெறும் இடமே தவிர, வணிக மையம் அல்ல. மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்க வேண்டும் என்பதுதான் முதன்மை பணியாக இருக்க வேண்டும். இதுபற்றி சிபிஎஸ்இ விதிமுறைகளில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

எனவே, இனிமேல் பள்ளி வளாகத்தில் எந்த மாதிரியான வணிகமும் நடக்கக்கூடாது.

மேலும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன் சில் (என்சிஇஆர்டி) வெளியிட் டுள்ள பாடப் புத்தகங்களை விடுத்து, தனியார் வெளியிட்டுள்ள புத்தகங்களை வாங்கச் சொல்லி பெற்றோர்கள் நிர்ப்பந்திக்கப்படு வதாகவும் சிபிஎஸ்இ அலுவலகத் துக்குப் புகார்கள் வரப்பெற் றுள்ளன. பள்ளிகளில் என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தனியார் பதிப்பகத்தினர் வெளியிடும் புத்தகங்களை உபயோகப்படுத்தக் கூடாது.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in