இலங்கை அகதிகளின் குடியுரிமைக்காக போராட்டம் நடத்துவேன்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

இலங்கை அகதிகளின் குடியுரிமைக்காக போராட்டம் நடத்துவேன்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
Updated on
1 min read

தமிழ்நாட்டிலுள்ள அகதி முகாம்களில் வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க போராட்டம் நடத்துவேன் என வாழும் கலையமைப்பின் நிறுவனரும், ஆன்மிகத் தலைவருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்தார்.

மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமுக்குள் சென்று முகாமில் வாழும் இலங்கை தமிழகர்களின் மனநிலைகளை அறிவதற்காக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இன்று காலை காலை 11 மணியளவில் வந்தார்.

பின்னர் அகதிகளை சந்தித்து பேச வேண்டும் என்று மண்டபம் முகாம் தனி துணை ஆட்சியரிடம் அனுமதி கேட்டார். நீங்கள் அகதிகளை சென்னையில் உள்ள அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும் என்று கூறி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மண்டபம் அகதிகள் முகாமில் வாழும் இலங்கை தமிழர்களைச் சந்தித்து அவர்களின் தற்போதைய மனநிலையைப் பற்றி அறிய வந்தேன். தமிழ்நாட்டிலுள்ள அகதி முகாம்களில் வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க போராட்டம் விரைவில் போராட்டம் நடத்துவேன்.

வாழ்நாள் முழுவதும் முகாம்களில் அகதிகளாக வாழ முடியாது. ஒன்று நமது நாட்டில் குடியுரிமையுடன் வாழ வேண்டும். இல்லையெனில் அவர்கள் இலங்கை சென்று கௌரவமாக வாழ வேண்டும். போராட்டம் குறித்து விரைவில் அறிவிப்பேன், என்றார்.

மேலும், இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தமிழர்கள் அனைவரும் ஒரணியில் திரண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in