

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
முதல்வர் ஜெயலலிதா:
மகா விஷ்ணு கிருஷ்ண ராக அவதரித்த திருநாளை கிருஷ்ண ஜெயந்தி யாக கொண்டாடும் அனைவருக் கும் எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திருநாளில் அனைத்து உயிர்களிடத்தும் நட்பும், கருணையும் உடைய வனாய் நான் எனது என்ற பற்று நீங்கி, இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகக் கொண்டு பொறுமையுடனும், மகிழ்ச்சியுடனும், இறைவனிடத் தில் மனதையும், மதியையும் அர்ப்பணித்து வாழ்ந்திட வேண்டுமென்ற கீத உபதேசத்தை மக்கள் மனதில் நிறுத்தி வாழ்ந்தால் உலகில் அமைதியும், மகிழ்ச்சியும் தழைத்தோங்கும்.
மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன்:
குழப்பத்தையும், தடுமாற்றத்தையும் தவிர்த்து, தெளிந்த நீரைப்போல மனதை நிலைநிறுத்தி பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்தால் ஒருவர் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்று எல்லா சுகங்களும் மன நிம்மதியும் கிடைக்கப் பெற்றவராய் மகிழ் வுடன் வாழ்ந்திடலாம் என்ற கிருஷ்ண பகவானின் கீத உபதேசத்தை நாளும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். கிருஷ்ண பகவான் அவதரித்த இத்திருநாளில் ஒவ்வொருவரும் அறத்தைப் போற்றி அனைத்து உயிர்களிடத்தும் நட்பும், கருணை உடையவனாய் வாழ்ந்திட வேண்டுமென்ற கீத உபதேசத்தை மக்கள் மனதில் நிறுத்தித் தர்மத்தை நிலைநாட்டிட உறுதியேற்போம்.
பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்ட தலைவர்களும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து களைத் தெரிவித்துள்ளனர்.