

சேலத்தில் டிரான்ஸ்ஃபார்மர் பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 2 மின் ஊழியர்கள் மின்சாரம் பாய்ந்ததில் பலியாகி னர். தொழிற்சாலையில் இயக்கப் பட்ட ஜெனரேட்டர் ரிட்டன் மின் சாரத்தால் விபத்து ஏற்பட்டதாக மின் ஊழியர்கள் கூறினர்.
சேலம், உடையாப்பட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட தொழிற்பேட்டை அருகே உள்ள டிரான்ஸ்ஃபார்மரில் நேற்று மின்வாரிய ஊழியர்கள் ஃபோர்மேன்கள் சரவணன், முத்து சாமி ஆகியோர் தலைமையில் மின்பாதை ஆய்வாளர் பால கிருஷ்ணன், வயர்மேன்கள் செல்வராஜ், ராமசாமி, சந்திர சேகரன், உதவியாளர் முருகன் ஆகியோர் பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பாலகிருஷ்ணன், முருகன் ஆகியோர் டிரான்ஸ்ஃபார்மரில் ஏறி எர்த் வயர்களை இணைத்த போது, திடீரென மின்சாரம் பாய்ந்தது. இதில், இருவரும் கருகிய நிலையில் கம்பியில் தொங்கினர். சக ஊழியர்கள் உட னடியாக இருவரையும் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத் துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவர் களை பரிசோதனை செய்த மருத் துவர்கள் இருவரும் இறந்து விட்டதாகக் கூறினர்.
தகவல் அறிந்து அங்கு வந்த அம்மாபேட்டை போலீஸார், பலியான மின் ஊழியர்களின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோத னைக்காக சேலம் அரசு மருத் துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து மின் ஊழியர் கள் கூறும்போது, ‘‘உடையாப் பட்டி பகுதியில் மில்கள், தொழிற் சாலைகள் அதிகமாக உள்ளன. மின் இணைப்பை துண்டித்து விட்டே டிரான்ஸ்ஃபார்மரில் பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபடுவோம். மின் துண்டிக்கப் பட்டதால், ஏதே ஒரு தொழிற் சாலையில் ஜெனரேட்டரை இயக்கியுள்ளனர்.
தொழிற்சாலையில் உள்ள சேஞ்ச் வயரை மாற்றிவிட்டே ஜெனரேட்டரை இயக்க வேண் டும். இதனை மாற்றாமல் ஜென ரேட்டரை இயக்கியதால், ரிட்டர்ன் மின்சாரம் கம்பி வழியாக டிரான் ஸ்ஃபார்மருக்கு வந்துள்ளது. இதனால், இருவரும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துவிட்டனர்’’ என்றனர்.
பலியான பாலகிருஷ்ணன் உடையாப்பட்டி, அம்பேத்கர் கலனியைச் சேர்ந்தவர். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்க ளுக்கு தீனதயாளன் என்ற மகனும் லாவண்யா என்ற மகளும் உள்ள னர். பலியான முருகன் குப்பனூர், கொட்டாயூர் காட்டுவளவைச் சேர்ந்தவர். இவரது மனைவி கவிதா. மகன் கோகுல் 6-ம் வகுப்பும், மகள் தேவிகா 10-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.