Published : 11 Feb 2017 08:55 AM
Last Updated : 11 Feb 2017 08:55 AM

காவல் துறை மூலம் அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு ஓபிஎஸ் மிரட்டல்: போயஸ் தோட்ட வளாகத்தில் திரண்ட அதிமுக நிர்வாகிகள் கடும் குற்றச்சாட்டு

காவல் துறை மூலம் அதிமுக எம்எல்ஏக் களுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மிரட்டல் விடுப்பதாக முன்னாள் அமைச்ச ரும், தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தின் தலைவருமான பா.வளர்மதி குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலை வராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அதற்கு முதல்வர் ஓபிஎஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்த ஓபிஎஸ், பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிக்குமாறு கேட்டுக் கொண்டுள் ளார். அதுபோல ஆளுநரை சந்தித்த சசிகலா, தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரினார்.

ஆளுநர் தனது முடிவை அறிவிக்காத நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கள், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்டச் செய லாளர்கள் என அக்கட்சியின் நிர்வாகி கள் சசிகலாவை சந்தித்தனர். நூற்றுக் கணக்கான தொண்டர்கள் ஜெயலலிதா வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் பகுதி யில் திரண்டனர். அவர்களில் பெரும்பாலா னவர்கள் அதிமுக நிர்வாகிகளின் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது செய்தியாளர்களிடம் பா.வளர்மதி கூறியதாவது:

ஆட்சி அமைக்க தேவையான பெரும் பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு சசிகலா வுக்கு உள்ளது. எனவே, அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என காத் திருக்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட எம்எல்ஏக்களை ஓபிஎஸ்ஸும், திமுகவினரும் பிணைக் கைதிகள் எனக் கூறுவது கண்டிக்கத்தக்கது. அவர்கள் தங்கள் விருப்பப்படியே ஓரிடத்தில் தங்கியுள்ளனர். அதிமுக எம்எல்ஏக்களுக்கு காவல் துறை மூலமும், ஆதரவாளர்கள் மூலமும் ஓபிஎஸ் மிரட்டல் விடுத்து வருகிறார். இதனால்தான் அவர்களின் செல்போன்கள் அணைத்து வைக்கப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்:

ஜெயலலிதாவில் ஒதுக்கப்பட்டவர்களும், அரசியலில் காணாமல் போனவர்களும் தான் ஓபிஎஸ்ஸை ஆதரிக்கின்றனர். பெரும்பான்மை பலம் இருப்பதால் சசிகலாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதாவால் கட்டிக்காக் கப்பட்டு திமுகவுக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் அதிமுகவை அழிக்க ஓபிஎஸ் திட்டமிடுகிறார். தம்மை 3 முறை முதல் வராக்கிய கட்சிக்கே அவர் துரோகம் செய்துவிட்டார். இதனை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது.

அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி:

ஜெயலலிதாவுக்கு சசிகலா எழுதிய கடிதத்தை ஓபிஎஸ் வெளியிட்டுள் ளார். அதில் தனக்கு எந்த பதவி ஆசை யும் இல்லை என்றுதானே சசிகலா கூறி யிருக்கிறார். ஜெயலலிதா இல்லாத நிலை யில் அதிமுகவை காப்பாற்றுவதற்காக தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று அவர் பொதுச்செயலாளர் ஆகியுள்ளார். ஒரு பெண்ணின் இடத்தை நிரப்ப ஒரு பெண் வருவது நியாயமானது. கடந்த 2 நாட்களாக எனது செல்போனை பயன்படுத்தவே முடியவில்லை. போனை எடுத்தால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். ஓபிஎஸ் ஆதரவாளர்களால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறையிடம் புகார் செய்வேன். ஆட்சி அமைக்க சசிகலாவை ஆளுநர் அழைப்பார் என நாங்கள் காத்திருக் கிறோம்.

முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா:

தமிழக முதல்வராக்கி முகவரி தந்த ஜெயலலிதாவுக்கும், அதிமுக வுக்கும் ஓபிஎஸ் துரோகம் இழைத்துள் ளார். ஓபிஎஸ்ஸுக்கு திமுக எம்எல்ஏக்கள் நிபந்தனையற்ற ஆதரவளிப்பார்கள் என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பேசியுள்ளார். ஆனால், இதனை ஸ்டாலின் மறுத்துள் ளார். அப்படியெனில் ஓபிஎஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டால் திமுக ஆதரவளிக்கும் என சட்டப்பேரவையில் துரைமுருகன் பேசியபோது ஸ்டாலின் ஏன் மறுக்கவில்லை. சுப்புலட்சுமி ஜெகதீசன் பேச்சின் மூலம் அதிமுகவை அழிக்கும் திமுகவின் சதித் திட்டத்துக்கு ஓபிஎஸ் துணை போயிருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது.

முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ்:

ஜெயலலிதா மறைந்ததும் ஓபிஎஸ்ஸுக்கு பதில் சசிகலா முதல்வராகி இருக்க முடியும். ஆனால், துயரத்தில் இருந்த அவர் ஓபிஎஸ்ஸை முதல்வராக்கினார். சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந் தெடுக்கப்பட்டபோது அவரது காலில் விழுந்து கட்சியை காப்பாற்ற வேண்டும் என்றார் ஓபிஎஸ். ஆனால், இன்று முதல்வர் பதவி கையைவிட்டு போகி றது என்றவுடன் பதவிக்காக கட்சிக் கும், ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்ய தயாராகிவிட்டார். திமுகவுடன் இணைந்து அதிமுகவை அழிக்க துடிக்கிறார்.

முன்னாள் அமைச்சர் சி.த.செல்ல பாண்டியன்:

ஜெயலலிதா இருக்கும் போதே அதிமுகவுக்கு துரோகம் இழைத்த வர்கள்தான் இப்போது ஓபிஎஸ் அணியில் உள்ளனர். ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ சண்முகநாதன் ஏற்கெனவே இரட்டை இலையை முடக்க துரோகிகளு டன் இணைந்து கையெழுத்திட்டவர். ஆனாலும் அவருக்கு எம்எல்ஏ, அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. கடைசிவரை சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தவர் திடீரென ஓபிஎஸ் பக்கம் சென்றுவிட்டார். அவருக்கு வாக்களித்த வைகுண்டம் தொகுதி மக்கள் அவரை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி:

முதல்வர் பதவி கை நழுவுகிறது என்றதும் ஓபிஎஸ்ஸால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பதவிக்காக எதையும் செய்யத் துணிந்துவிட்டார். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒரு போதும் திமுகவுக்கு சாதகமாக செயல் பட மாட்டார்கள். ஆனால், பதவியில் நீடிப்பதற்காக வளர்த்த கட்சி அழிந்தாலும் பரவாயில்லை என திமுகவுடன் கரம் கோர்த்து செயல்பட்டு வருகிறார் ஓபிஎஸ். இதனை கோடிக்கணக்கான அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் ஏற்க மாட் டார்கள்.

முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந் திரன்:

அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டச் செய லாளர்கள் என அனைவரும் சசி கலாவையே ஆதரிக்கின்றனர். அரசிய லில் அடையாளமே இல்லாமல் ஒதுக்கப்பட்ட சிலர் மட்டுமே ஓபிஎஸ்ஸை ஆதரிக்கின்றனர். யாராலும் அதிமுகவை அழிக்க முடியாது. பெரும்பான்மைக்கும் அதிகமான எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதால் சசிகலாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார். அந்த நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.

முன்னாள் வாரியத் தலைவர் சிந்து ரவிச்சந்திரன்:

எம்ஜிஆர் மறைந்தபோது அதிமுகவை ஒன்றிணைக்கவும், இரட்டை இலை சின்னத்தைப் பெறவும் சசிகலா, திவாகரன் போன்றவர்கள் எண்ணற்ற தியாகங்களை செய்துள்ளனர். ஒரு கட்சி ஆட்சியமைக்க தேர்தல் களப்பணி என்பது மிகவும் முக்கியமானது. அதிமுக வெற்றிக்கு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் ஆற்றிய களப்பணியே முக்கிய காரணம். டிடிவி தினகரன், டாக்டர் வெங்கடேஷ் போன்றவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து அதிமுகவை வளர்த்தார்கள். ஆனால், பதவிக்காக திமுகவுடன் இணைந்து வளர்த்த கட்சிக்கே ஓபிஎஸ் துரோகம் செய்துவிட்டார். இதனை அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா:

அவைத்தலைவர் என்பதால் மதுசூதனனுக்கு பெரும் மதிப்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது. ஆனால், சுயநலத்துக்காக வளர்த்த கட்சிக்கே துரோகம் செய்துள்ளார். திமுக எம்எல்ஏ சேகர்பாபு தான் அவரை ஓபிஎஸ்ஸிடம் அழைத்துச் சென்றுள்ளார். தேர்தல் ஆணையத்துக்கு மதுசூதனன் கடிதம் எழுதியுள்ளார். சசிகலா முதல்வராகாமல் தடுக்க வேண்டும் என்ற திமுக சதித்திட்டத்தின் ஒரு பகுதியே இது. ஆளுநரிடம் சசிகலா, ஓபிஎஸ் இருவரும் உரிமை கோரியுள்ளதால் சசிகலா முதல்வர் ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தாமதம் ஆனாலும் விரைவில் சசிகலா முதல்வர் ஆவது உறுதி. ஆளுநரிடம் வழங்கப்பட்ட கடிதத் தில் சசிகலா முதல்வராக 134 எம்எல்ஏக் கள் கையெழுத்திட்டுள்ளனர்.

அதிமுக பேச்சாளர் அனிதா குப்புசாமி:

அம்மாவுடன் 33 ஆண்டுகள் வாழ்ந்து அவருக்கு உறுதுணையாக இருந்த சசிகலாவால் மட்டுமே ஜெயலலிதாவின் இடத்தை நிரப்ப முடியும். எனவேதான் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் அவர் பக்கம் உறுதியாக நிற்கின்றனர். எனவே, சசிகலா முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது. விரைவில் ஆளுநர் மாளிகையில் இருந்து ஆட்சி அமைக்குமாறு சசிகலாவுக்கு அழைப்பு வரும். அந்த நல்ல செய்திக்காக காத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, கே.பாண்டியராஜன், விஜிலா சத்தி யானந்த் எம்பி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலாவை சந்தித்துப் பேசினர்.

கழிப்பறை இல்லாததால் அவதிப்பட்ட பெண் காவலர்கள்

கார்டன் பகுதியில் நூற்றுக்கணக்கான காவலர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் கணிசமான எண்ணிக்கையில் பெண் காவலர்களும் உள்ளனர். அப்பகுதியில் கழிப்பறை வசதி இல்லாததால் பெண் காவலர்களும், பெண் நிருபர்களும் பெரும் துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர். பெரும் பணக்காரர்கள் வசிக்கும் பகுதி என்பதால் கழிப்பறையை பயன்படுத்த யார் வீட்டிலும் அனுமதிப்பதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x