Published : 31 Jul 2016 10:33 AM
Last Updated : 31 Jul 2016 10:33 AM

பண்பாடு, கலாச்சாரம் நிறைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும்: மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் வலியுறுத்தல்

சாதியற்ற, பண்பாடும் கலாச்சா ரமும் நிறைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று மேகாலயா மாநில ஆளுநர் வி. சண்முகநாதன் கூறினார்.

சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி வளாகத்தில், இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி வரும் 2-ம் தேதி தொடங்க உள்ளது. இதை ஒட்டி பல்வேறு நிகழ்வுகள் நடத் தப்பட்டு வருகின்றன. ஆயிரக்க ணக்கானோர் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி, இன்னிசை நிகழ்ச்சி, விவேகானந்தர் ரத ஊர்வலம் ஆகிய நிகழ்வுகள் கடந்த சில வாரங்களாக நடத்தப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, 40-க்கும் அதிகமான பள்ளிகளைச் சேர்ந்த 20 ஆயிரம் மாணவர்கள் விவே கானந்தர் உடையணிந்து ஊர்வ லமாக வந்து உறுதி மொழியேற் கும் நிகழ்ச்சி, சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடந்தது. காமராஜர் சாலை குடிசை மாற்று வாரியத்துக்கு எதிரே உள்ள சேவை சாலையில் தொடங்கிய மாணவர்கள் ஊர்வலத்தை திரைப்பட இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் தொடங்கி வைத்தார். விவேகானந்தர் இல்லம் எதிரே மெரினா கடற்கரையில் ஊர்வலம் நிறைவடைந்தது.

இதில் விவேகானந்தர்போல உடையணிந்து பங்கேற்ற மாண வர்கள், உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேகாலயா ஆளுநர் வி.சண்முகநாதன் உறுதிமொழிகளை வாசிக்க, அதை மாணவர்கள் திரும்பக் கூறி உறுதிமொழியேற்றனர்.

பின்னர் நிருபர்களிடம் ஆளுநர் சண்முகநாதன் கூறியதாவது:

இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியை முன்னிட்டு 20 ஆயிரம் மாணவர்கள் விவே கானந்தர்போல் உடையணிந்து ஊர்வலமாக செல்லும் நிகழ்வில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மாணவர்கள் அனைவரின் மனதிலும் முன்னேற வேண்டும் என்ற கனவு உள்ளதை அறிந்து கொள்ள முடிந்தது. தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வண்ணம் இந்த ஊர்வலம் நடந் தது.

தமிழக மக்களுக்கு அழைப்பு

வட கிழக்கில் உள்ள மேகாலயா மற்றும் மணிப்பூரின் ஆளுந ரான நான், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். வடகிழக்கு பகுதிகளை பற்றி நாம் அதிகம் அறிந்துகொள்ள வேண்டும். எண்ணற்ற இயற்கை வளங்கள் அங்கு உள்ளன. வற்றாத ஜீவ நதியான பிரம்மபுத்திரா, காசிரங் கா பூங்கா என பல்வேறு இடங் கள் உள்ளன. சைவ விலங்கான ஒற்றைக் கொம்புடைய காண்டா மிருகம் உள்ளிட்ட அறிய வகை விலங்குகள் உள்ளன. இவற்றை காண்பதற்காக தமிழக மக்கள் அங்கு வர வேண்டும்.

சாதியற்ற, பண்பாடும் கலாச்சா ரமும் நிறைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும், ஒருமைப் பாட்டை வலுப்படுத்த, விவே கானந்தரின் கருத்துகளை மக் களிடம் நாம் எடுத்துச் செல்ல வேண்டும். இந்தியாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல் வதற்கான பணிக ளில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் துணைத் தலை வர் ராஜலட்சுமி, ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி உட்பட ஏராள மானவர்கள் பங்கேற்றனர்.

8-வது கண்காட்சி

சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் 8-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி, வரும் 2-ம் தேதி தொடங்குகிறது. இந்து ஆன்மிக மற்றும் சேவை அறக்கட்டளை சார்பில் நடக்கும் கண்காட்சியை 2-ம் தேதி மாலை 5 மணி அளவில் யோகா குரு பாபா ராம்தேவ் தொடங்கி வைக்கிறார். சீக்கிய மதகுரு கியானி இக்பால் சிங், புத்த மத அறிஞரும் திபெத்தியன் படிப்புகளுக்கான மத்திய பல்கலைக்கழக துணை வேந்தருமான பேராசிரியர் கெஷெ காவங் சாம்டென், தர்மசாலா கோயில் அறங்காவலர் வீரேந்திர ஹெக்டெ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

2-ம் தேதி மாலை கங்கை காவிரி மங்கல தீர்த்த கலச யாத் திரை நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதைத் தொடர்ந்து 3-ம் தேதி கங்கை மற்றும் பூமி வந்தனம், 4 - ஆச்சார்ய வந்தனம், 5 - கன்னியா வந்தனம், 6 - கோ வந்தனம் , கஜ வந்தனம், துளசி வந்தனம், 7- பாரதமாதா வந்தனம், பரமவீர் வந்தனம், 8-ம் தேதி விருட்ச மற்றும் நாக வந்தனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x