

வணிகர்கள் அனைவரும் தங்கள் விவரங்களை ஜூன் 30-ம் தேதிக்குள் புதிய இணையதளத் தில் பதிவு செய்துகொள்ள வேண் டும் என்று வணிகவரித் துறையின் சென்னை மைய கோட்ட இணை ஆணையர் மு.பரமேஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார்.
வணிகவரித் துறை சார்பில் முழுமையான கணினிமயமாக்கல் திட்டத்தின் கீழ், வணிகர்கள் தங்கள் கொள்முதல், விற்பனை தொடர்பான மாதாந்திர நமூனாக்களை இணையதளம் மூலமாக தாக்கல் செய்வதற்காக e-C Tax என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தை https://ctd.tn.gov.in முகவரியில் பார்க்கலாம். ஜூலை 1-ம் தேதி முதல் வணிகர்கள் அனைவரும் தங்கள் நமூனாக் களை இந்த இணையதளத்தின் மூலமாகத்தான் தாக்கல் செய்ய வேண்டும் என்று வணிகவரித் துறை அறிவுறுத்தி வருகிறது.
இந்த நடைமுறை அமலுக்கு வர குறுகிய காலமே உள்ள நிலையில், இதுகுறித்து வணிகர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் சென்னை எத்திராஜ் சாலையில் உள்ள காஞ்சி ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் வணிகவரித் துறையின் சென்னை மைய கோட்ட இணை ஆணையர் மு.பரமேஸ்வரன் கலந்துகொண்டு, முகாமைத் தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது, “புதிய இணையம் வழியாக நமூனாக்களை தாக்கல் செய்யும் நடைமுறை ஜூலை 1 முதல் அமலுக்கு வர இருப்பதால், அனைத்து வணிகர்களும் தங்கள் விவரங்களை உடனடியாக அந்த இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்” என்றார்.
பின்னர், முகாமில் பங்கேற்ற 250 வணிகர்களுக்கு, இணையதளத்தில் நமூனாக்களை தாக்கல் செய்யும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இது தொடர்பாக வணிகவரித் துறை துணை ஆணையர் வா.ஜானகி கூறும்போது, “இந்த இணையதளம் கடந்த ஜனவரி 29-ம் தேதி முதல் இயங்கி வந்த நிலையில், அதை பயன்படுத்திய வணிகர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், இணையதளம் செழுமைப்படுத்தப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து, ஜூலை 1-ம் தேதி முதல் இணையதளம் முழு பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.
முதலில் இந்த இணையதளத்தில் வணிகர்கள் தங்கள் கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை வழங்கி பதிவு (Sign up) செய்துகொள்ள வேண்டும். அதனைத் தொடர்ந்து, தங்களுடைய நிரந்தர கணக்கு எண்ணை (PAN) சரிபார்த்து, தவறாக இருப்பின் திருத்திக்கொள்ள வேண்டும். அதற்கான வசதி அந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், அந்த இணையதளம் வழியாக நமூனாக்களை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த பயிற்சி முகாமில் வணிகர் களுக்கு ஏற்பட்ட சந்தேகங் களுக்கு விளக்கம் அளிக்கப்பட் டது. வணிகர்கள் தங்கள் விவரங் களை பதிவு செய்யாவிட்டால், அவர்களின் மாதாந்திர நமூனாக்களை ஜூலை 1-ம் தேதி முதல் தாக்கல் செய்ய முடியாது. நமூனா தாக்கலை எளிதாக்கும் வகையிலேயே இந்த இணையதள நமூனா தாக்கல் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது” என்றார்.