

நடிகர் விக்ரம் மகள் அக்ஷீதாவின் காணாமல் போன மோதிரத்தை கால் டாக்சி ஓட்டுநர் லட்சுமணன் கண்டெடுத்து கொடுத்துள்ளார்.
திரைப்பட நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதா. இவருக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் பேரன் மனு ரஞ்சித்துக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், அக்ஷிதா அணிந்திருந்த நிச்சயதார்த்த மோதிரம் கடந்த வாரம் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் காணாமல் போனது. வைர மோதிரம் காணாமல் போனது தொடர்பாக நடிகர் விக்ரம் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த சூழலில் கால் டாக்சி ஓட்டுநர் லட்சுமணன், விக்ரம் மகள் தொலைத்த வைர மோதிரத்தை கண்டெடுத்து கொடுத்துள்ளார்.