Published : 08 Feb 2017 08:20 AM
Last Updated : 08 Feb 2017 08:20 AM

பி.எச்.பாண்டியன் கூறிய லட்சுமிபாய் கர்வி வழக்கு

பி.எச்.பாண்டியன் நேற்றைய பேட்டி யின்போது, மும்பை லட்சுமிபாய் கர்வியின் வழக்கை ஜெயலலிதா வின் மரணத்தோடு தொடர்பு படுத்திக் கூறினார்.

அந்த வழக்கு குறித்த விவரம்:

மகாராஷ்டிர மாநிலம் புனே வைச் சேர்ந்தவர் இந்துமதி என்ற லட்சுமிபாய். 1922-ல் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தான தொழிலபதிபர் ஆனந்த் ராமச்சந்திர கர்வி என்பவரை மணந்ததன் மூல மாக, இவரும் புனேவின் மிகப் பெரிய தொழிலதிபர்களில் ஒரு வராகிறார். இவர்களுக்கு 2 மகன்கள். கணவர் இறந்த பிறகு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அனைத்தும் லட்சுமி பாய் வசம் வருகிறது.

டாக்டரின் சதித் திட்டம்

இந்த தருணத்தில், லட்சுமி பாயின் சொத்துக்களை ஒட்டு மொத்தமாக அபகரிக்க சதித்திட்டம் தீட்டுகிறார் அவரது குடும்ப டாக்டர் ஆனந்த் சிண்டமான் லாகூ. அதன்படி, உடல்நலம் குன்றி யிருந்த லட்சுமிபாய்க்கு சிகிச்சை அளிக்கப்போவதாகக் கூறி புனே வில் இருந்து மும்பைக்கு அழைத்துச் செல்கிறார். 1956 நவம்பர் 12-ம் தேதி இரவு 10 மணிக்கு ரயிலில் லட்சுமிபாயுடன் மும்பைக்கு வருகிறார். ரயிலில் வரும்போதே லட்சுமிபாய்க்கு விஷஊசி போடுகிறார். லட்சுமிபாய் சுயநினைவை இழக்கிறார்.

மறுநாள் காலை, அதாவது நவம்பர் 13-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு மும்பை ரயில் நிலையம் வந்தடைகிறது. தன்னுடன் ரயிலில் பயணம் செய்த யாரோ ஒரு பெண் மயங்கிக் கிடந்ததால் டாக்டர் என்ற முறையில் அழைத்து வந் திருப்பதாக பொய் கூறி, மயக் கத்தில் கிடக்கும் லட்சுமிபாயை ஜி.டி. மருத்துவமனையில் சேர்க் கிறார். அங்கு காலை 11.30 மணிக்கு லட்சுமிபாய் இறந்துவிடுகிறார்.

அவருக்கு செலுத்தப்பட்ட விஷ ஊசி மருந்தும், பயணத்தின்போதே கரைந்து போய்விட்டதால், பிரேதப் பரிசோதனையில் அவரது மரணத்துக்கான தடயம் எதுவும் கிடைக்கவில்லை.

ஆனால், ‘அது இயற்கை மரணம் அல்ல. சொத்துக்களை அபகரிப்பதற்காக நடத்தப்பட்ட திட்டமிட்ட கொலை’ என்பதை சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப் படையில் உறுதிசெய்த கீழமை நீதிமன்றம், இந்திய தண்டனைச் சட்டம் 302-வது பிரிவில், லட்சுமி பாயின் குடும்ப டாக்டர் ஆனந்த் சிண்டமான் லாகூவுக்கு மரண தண்டனை விதித்து தீ்ர்ப்பளித்தது.

அதாவது, இந்தக் கொலையில் நிரூபிக்கத்தக்க சாட்சியங்கள் எதுவுமே இல்லை. ஆனாலும், லட்சுமிபாயின் மரணத்துக்கு முன்னும், பின்னும் அவருடனேயே உடனிருந்து பயணித்த டாக்டர் ஆனந்த் சிண்டமான் லாகூவின் நடத்தைகள், ஆசைகள் மற்றும் லட்சுமிபாய் மரணத்துக்குப் பிறகு அவர் அடையும் திடீர் பலன்கள் என அனைத்தும், ஆனந்த் சிண்டமான் லாகூதான் கொலையாளி என்பதை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியுள்ளது என்பதே அந்த தீர்ப்பின் சாராம்சம்.

இத்தீர்ப்பை மும்பை உயர் நீதிமன்றமும் உறுதிசெய்த நிலை யில், தண்டனை விதிக்கப்பட்ட லாகூ, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார். இதை விசாரித்த நீதிபதி எம்.ஹிதா யத்துல்லா தலைமையிலான 3 பேர் கொண்ட நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் வேறுபட்டாலும், இறுதியில் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து ஆனந்த் சிண்டமான் லாகூவின் மரணதண்டனையை உறுதி செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x