

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட் டங்களில் விதிகளை மீறி செயல் பட்டதாக `சீல்’ வைக்கப்பட்ட தாது மணல் நிறுவனங்களின் கிடங்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட் டத்தில் நேற்று 3-வது நாளாக தாதுமணல் கிடங்குகளில் ஆய்வு நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம், ராதா புரம் தாலுகாவில் வி.வி. மினரல், பிஎம்சி, ஐஎம்சி, ஐஓஜிஎஸ் ஆகிய நிறுவனங்களுக்குச் சொந்தமான தாது மணல் ஆலைகளும், கிடங்குகளும் உள்ளன. இவற்றில் விதிகளை மீறி தாது மணல் இருப்பில் வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து நேற்று முன்தினம் 7 அதி காரிகள் குழுவினர் அதிரடியாக 15 தாது மணல் கிடங்குகளுக்கு ‘சீல்’ வைத்தனர். இதுபோல், தூத்துக்குடி மாவட்டத்தில் 19 கிடங்குகள் ‘சீல்’ வைக்கப்பட்டன.
‘சீல்’ வைக்கப்பட்ட தாது மணல் கிடங்குகளை அதிகாரிகள் கண் காணித்து வருகிறார்கள். திருநெல்வேலி மாவட்ட ஆட்சி யர் மு.கருணாகரனின் அறிவுறுத் தலின்பேரில் இந்த கிடங்கு களில் போலீஸாரை நிறுத்துவதற்கு, மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் விக்ரமன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 3-வது நாளாக தாது மணல் கிடங்குகளில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், நேற்று கூடுதலாக எந்த கிடங்குகளுக்கும் ‘சீல்’ வைக்கப்படவில்லை.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் கூறும்போது, “தூத்துக்குடி மாவட் டத்தில் இதுவரை 22 தாது மணல் கிடங்குகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட் டிருக்கிறது. இந்த கிடங்குகளில் 4,37,426 டன் தாது மணல் இருப்பில் உள்ளது. நேற்று 3-வது நாளாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு தொடரும்” என்று தெரிவித் தார்.
இதனிடையே ‘சீல்’ வைக்க முடி யாத, திறந்தவெளி தாது மணல் கிடங்குகளின் பொறுப்பாளர்களி டம், அங்கிருந்து ஏற்றுமதி உள்ளிட்ட எவ்வித செயல்பாடும் நடைபெறாது என்று அதிகாரிகள் எழுதி வாங்கியுள்ளனர்.