‘நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

‘நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்
Updated on
1 min read

கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் உள் ளிட்ட அறிவியல் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் உதவி பேராசி ரியர் பணியில் சேருவதற்கு மத்திய தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) நடத்தும் ‘நெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இத்தேர்வுக்கு ஆன்லைனில் (www.csirhrdg.res.in) விண்ணப் பிக்க கடைசி நாள் மார்ச் 7-ம் தேதி யுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் மார்ச் 21-ம் தேதிக்குள் அனுப்ப வேண் டும் என்று சிஎஸ்ஐஆர் அறிவித்துள்ளது. நெட் தேர்வுக் கான பாடத்திட்டமும், மாதிரி வினாத்தாளும் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in