

பட்ஜெட் தாக்கல் நேற்று முடிந்த தும் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேரவை காங் கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி கூறியதாவது:
2-வது முறையாக தொடர்ச்சி யாக ஆட்சி அமைத்துள்ள அதிமுக அரசின் முதல் பட்ஜெட் பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, விவசாயிகள் நலன் குறித்து எந்த திட்டம், அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை.
நாட்டிலேயே வளர்ச்சி அடைந்த மாநிலமாக தமிழகத்தை மாற் றுவோம் என கூறி அதிமுக ஆட்சியைப் பிடித்தது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் வருவாய்க்கும், செலவுகளுக்கு மான இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
தமிழக அரசின் மொத்த கடன் ரூ.2 லட்சத்து 52 ஆயிரம் கோடி என பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படை யாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்த அளவுக்கு கடன் இருக்கும் தமி ழகம் எப்படி வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாறும்?
இவ்வளவு கடனை அரசு எப்படி சரிக்கட்டப் போகிறது என்பதற்கான எந்த திட்டங்களும் பட்ஜெட்டில் இல்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அறிவிப்புகளும் இல்லை. தமிழகத்தின் நிதி நிலைமை குறித்த உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் இந்த பட்ஜெட் மக்களை ஏமாற்றும் கண்துடைப்பு நாடகமாகும்.
இவ்வாறு அவர் கூறினார். காங் கிரஸ் கொறடா எஸ்.விஜய தரணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.