

அடையாறு ஆற்றில் ஆக்கிரமிப்பால் வெள்ளம் ஏற்பட்டதாக கூறுகின்றனர். ஆற்றின் கரையோரம் 96 சதவீத ஆக்கிரமிப்புகளை செய்திருப்பது பெருமுதலாளிகள்தான். குடிசைவாழ் மக்களை 20 கி.மீ.க்கு அப்பால் குடியமர்த்துவதன்மூலம், பல பணிகளுக்கு வேலை ஆட்கள் கிடைக்காத சூழல் ஏற்படும். பல ஏக்கர் நிலத்தை தனியார் மருத்துவக் கல்லூரி அறக்கட்டளைக்கு வழங்கும் அரசு, அந்த நிலத்தில் குடிசை வாழ் மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கலாம்.
அரசிடம் பேரிடர் மேலாண்மை குறித்த திட்டங்கள் இல்லை. மக்களுக்கு நிவாரணம் தேவை யில்லை. நிரந்தர தீர்வு தேவை. அதற்கு மத்திய அரசிடம் கேட்டுள்ள ரூ.26 ஆயிரம் கோடியில் ஒரு பகுதியை செலவிட்டால் போதும். இனியாவது பேரிடர் மேலாண்மை திட்டத்தை நகராட்சி நிர்வாகத்துறை வகுக்க வேண்டும். அந்த திட்டம் அறிவியல்பூர்வமாக இருக்க வேண்டும் என்றார்.
இவ்வாறு ஜனகராஜன் கூறினார்.