‘அக்ரி இன்டெக்ஸ்’ கண்காட்சி நிறைவு: ரூ.100 கோடிக்கு வர்த்தக விசாரணை

‘அக்ரி இன்டெக்ஸ்’ கண்காட்சி நிறைவு: ரூ.100 கோடிக்கு வர்த்தக விசாரணை

Published on

கோவையில் ‘அக்ரி இன்டெக்ஸ் 2016’ கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. கண்காட்சியை 2.5 லட்சம் பேர் பார்வையிட்டதா கவும், ரூ.100 கோடிக்கு வர்த்தக விசாரணை நடை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கோவை அவிநாசி சாலை கொடிசியா அரங்கில் ‘அக்ரி இன்டெக்ஸ் 2016’ கண்காட்சி, முதல்முறையாக இந்திய அரசின் அங்கீகாரத்துடன் கடந்த 15-ம் தேதி தொடங்கி நேற்றுவரை 4 நாட்கள் நடந்தது.

மத்திய வேளாண்துறை, வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், மத்திய வேளாண் மற்றும் பதனிடுதல் ஏற்றுமதி மேம்பாட்டு முகமை, கோவை வேளாண் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறி வியல் பல்கலை, அகில இந்திய வேளாண் இயந்திர உற்பத்தியா ளர்கள் சங்கம், கொடிசியா ஆகி யவற்றின் ஆதரவோடு கண்காட்சி நடந்தது.

11 மாநிலங்கள் உட்பட இத்தாலி, இஸ்ரேல், ஜப்பான், ஜெர்மனி உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 400 நிறுவனங் கள் இடம்பெற்றன. கண்காட்சி யில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், நவீன நீர்ப்பாசன கருவிகள் மற்றும் தானியங்கி கருவிகள், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் பண்ணை தொழில்நுட்பம், வேலிகள் மற்றும் மறைப்பு வலைகள், எடை மற்றும் சோதனைக் கருவிகள், பயிர் ஊட்டச்சத்து மற்றும் மேலாண்மை, நீர் குட்டை லைனிங், மீன் வளர்ப்பு குறித்த விவரங்களுடன் 430 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

மண்ணில்லா விவசாயம் குறித்த செயல்முறை விளக்கம் இடம்பெற்றது. இதன் மூலம் மாடித்தோட்ட விவசாயம் வளர்ச்சியடையும். நிறுவனங்கள் தங்களது பொருட்களை அறி முகம் செய்ய அறிமுக மேடை, ஒருங்கிணைந்த மாதிரி பண்ணை நேரடி செயல் விளக்கம், விவ சாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் பல்கலையின் கருத்த ரங்கு, வணிகத்துக்கான புதிய வாய்ப்புகளை எதிர்நோக்கும் நிறுவனங்களுக்காக, வணிகத் தொடர்பை ஏற்படுத்துதல் ஆகி யவையும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

கண்காட்சி குறித்து ‘அக்ரி இன்டெக்ஸ் 2016’ தலைவர் ஆர். சசிகுமார் கூறும்போது, ‘‘அக்ரி இன்டெக்ஸ்’ கண்காட்சிக்கு 2.5 லட்சம் பேர் வந்து பார்வையிட்டுள் ளனர். சுமார் ரூ.100 கோடிக்கு வர்த்தக விசாரணை கிடைத்துள் ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.20 கோடி அதிகம். பொதுமக்களும், குறிப்பாக விவசாயிகளும், மாணவர்களும் அதிக எண்ணிக்கையில் வந்து பார்வையிட்டுள்ளனர்.

வேளாண் இயந்திரங்கள், உரங்கள் தொடர்பான விசாரணை அதிகமாக நடந்துள்ளது. அதிலும் குறிப்பாக, சிறிய இயந்திரங்கள் தொடர்பாக விசாரணை கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிக மாக நடந்துள்ளது. இளைஞர்கள் பலர் கண்காட்சியிலும், கருத்த ரங்குகளிலும் பங்கு கொண்டு வேளாண்மை தொடர்பான தகவல் களையும் தொழில்நுட்ப முறை களையும் அறிந்து கொள்

வதில் ஆர்வம் காட்டியுள்ளனர்" என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in