Published : 02 May 2017 09:30 AM
Last Updated : 02 May 2017 09:30 AM

திருவாரூர் டாஸ்மாக் குடோனுக்கு மதுபாட்டில்கள் வந்த லாரியில் வெடிகுண்டு: போலீஸார் கைப்பற்றி விசாரணை

திருவாரூர் டாஸ்மாக் குடோனுக்கு மதுபாட்டில்களை ஏற்றி வந்த லாரியில் இருந்த நாட்டு வெடிகுண்டு மற்றும் ஆயுதங்களை போலீஸார் கைப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூரை அடுத்த விளமலில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்துக்குச் சொந்தமான குடோனுக்கு, கோவை வளவையாற்றில் உள்ள இம்பீரி யல் என்ற மதுபான நிறுவனத்தில் இருந்து கடந்த 27-ம் தேதி மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. மதுபாட் டில்களை இறக்கிவைக்க அனுமதி கிடைக்காததால், குடோனுக்கு அரு கில் லாரி நிறுத்தி வைக்கப்பட்டி ருந்தது.

இந்நிலையில், சென்னை எண் ணூரில் இருந்து நேற்று அங்கு வந்த போலீஸார், லாரியை சோதனை செய்தனர். அப்போது, ஓட்டுநர் இருக்கைக்குக் கீழ் அட்டைப் பெட்டியில் தவிடு இருந் தது. தவிட்டுக்குள் ஒரு நாட்டு வெடி குண்டு, சுமார் அரை கிலோ எடை யுள்ள வெடிமருந்து பொட்டலம், அரிவாள் ஆகியவை இருந்தன. அவற்றைக் கைப்பற்றிய எண்ணூர் போலீஸார் இதுகுறித்து, உள்ளூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்து விட்டு, கைப்பற்றப்பட்ட பொருட் களுடன் புறப்பட்டுச் சென்றனர்.

இதுகுறித்து, திருவாரூர் மாவட்ட போலீஸார் கூறியதாவது: கோவை வளவையாற்றைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை, ஒரு கொலை வழக்கு தொடர்பாக சென்னை எண்ணூர் போலீஸார் சில தினங்களுக்கு முன்பு பிடித்து விசாரித்தனர். அப்போது, கோவையில் இருந்து திருவாரூருக்கு மதுபாட்டில்கள் ஏற்றிச் சென்ற லாரியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து, அவரை போலீ ஸார் அழைத்துக்கொண்டு திரு வாரூர் வந்து, லாரியில் இருந்த வெடிகுண்டு உள்ளிட்ட பொருட் களைக் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.

வெடிகுண்டுடன் இருந்த லாரியை காரைக்காலைச் சேர்ந்த மோகன், கோவை வளவை யாற்றைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகியோர் கடந்த 26-ம் தேதி கோவையில் இருந்து மதுபாட்டில் கள் ஏற்றிக்கொண்டு 27-ம் தேதி காலை திருவாரூர் குடோனுக்கு வந்துள்ளனர்.

மதுபான பாட்டில்களை இறக்க அனுமதி கிடைக்காததால், லாரியில் வந்த கோவையைச் சேர்ந்த கிளீனர் லாரிக்கு காவலாக இருக்கச் சொல்லிவிட்டு, சரக்கு இறக்க அனுமதி கிடைத்தவுடன் செல் போனில் தகவல் தரும்படி கூறி விட்டுச் சென்றுள்ளனர். தற்போது, அவர்களது செல்போன் எண்களை யும் தொடர்புகொள்ள முடிய வில்லை. வெடிகுண்டு கைப்பற்றப் பட்ட சம்பவம் தெரிந்து, அவர்கள் தலைமறைவாகியிருக் கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

அதிமுக கொடி கட்டிய காரில்…

திருவாரூர் டாஸ்மாக் நிறுவன குடோனுக்கு அதிமுக கொடி கட்டிய காரில், கொலை வழக்கில் பிடிபட்ட ரமேஷை அழைத்துக்கொண்டு எண்ணூர் போலீஸார் வந்தனர். அந்தக் கார், கொலை வழக்கு மற்றும் வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்புடையதுதான் என போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x