வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு வீடு கட்டும் திட்டத்துக்காக நிதி வழங்குகிறது மலபார் குழுமம்: மார்ச் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு வீடு கட்டும் திட்டத்துக்காக நிதி வழங்குகிறது மலபார் குழுமம்: மார்ச் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
Updated on
1 min read

கேரளத்தைச் சார்ந்த ரியல் எஸ் டேட் மற்றும் நகை விற்பனை நிறுவனமான மலபார் குழுமம், ஏழை மக்களுக்கு வீடு கட்ட நிதியுதவி அளிக்கிறது.

இதுகுறித்து மலபார் குழுமத் தின் தலைவர் அஹமது கூறும் போது, “ஏழை மக்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்தும் தொலை நோக்கு லட்சியத்தின் அவசியத்தை மத்திய, கேரள அரசுகளுக்கு உணர்த்தும் விதமாக இவ்வாறு செய்யப்படுகிறது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்த லைஃப் மிஷன் மற்றும் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா போன்றவற்றுக்கு ஆதரவு தரும் வகையிலும், சமூகத்தில் பின்தங்கிய மக்கள் தன்னிறைவான வாழ்க்கை வாழ அவர்களுக்கு உதவும் வகையிலும் லாபத்தில் 5 சதவீதத்தை அவர்களுக்காக ஒதுக்கியுள்ளோம். சமூகத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், சமூக நலத்திட்டங்களை ஆதரிக்கவும் மலபார் குழுமம் உதவி வருகிறது. கணவனை இழந்தவர்கள் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு வீடுகட்ட சிறப்புச் சலுகை வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.

கூட்டாண்மை சமூக பொறுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மலபார் குழுமம் ஏற்கெனவே 10,310 குடும்பங்களுக்கு, அவர் களின் வாழ்வாதாரம் மற்றும் நல்வாழ்வுக்காக நிதியுதவி வழங்கியுள்ளது.

4 சென்ட் நிலம் வைத்துக் கொண்டு, கார்பெட் ஏரியாவில் 600 சதுர அடிக்கு கீழே வீடு கட்டவேண்டுமென்று விரும்பு பவர்கள் நிதியுதவிக்கு விண்ணப் பிக்கலாம். விண்ணப்பத்துடன் நிலப் பத்திரங்கள், புகைப்படத்துடன் கூடிய ஏதாவது ஓர் அடையாள அட்டையின் நகல் மற்றும் ஹவுஸ் பிளான் ஆகியவற்றை இணைத்து, 2017 மார்ச் 10-ம் தேதிக்குள் அருகில் உள்ள மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஸ்டோர், மலபார் டெவலப்பர்ஸ் அலுவலகம் அல்லது மலபார் ஹவுசிங் அறக் கட்டளையில் சமர்ப்பிக்க வேண் டும் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in