

வறட்சி நிவாரணம் குறித்து அமைச் சர்கள் குழு ஆய்வு செய்யும் என்று முதல்வர் தெரிவித்துள்ள தால், நாளை நடக்கவிருந்த மறியல் போராட்டம் ஒத்திவைக் கப்படுகிறது என்று அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங் கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
வறட்சியால் பெரிதும் பாதிக் கப்பட்டுள்ள தமிழகத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் கேட்டுப் பெற வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாய அமைப்பு கள் சார்பில் 5-ம் தேதி (நாளை) சாலை மறியல் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை தலை மைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று சந் தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பாண்டியன் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு தற் போது கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. கர்நாடக அரசும் காவிரியில் தண்ணீர் திறக்கவில்லை. மத்திய அரசும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழ கத்தை வஞ்சித்து வருகிறது. பருவமழையும் பொய்த்துவிட்டது. இதனால் 18 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 90-க்கும் அதிகமான விவசாயிகள் இறந்துள்ளனர்.
எனவே, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். தமிழகத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் கேட் டுப் பெற வேண்டும். பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி 5-ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது.
அதற்கு ஆதரவு கேட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா உட்பட பல்வேறு கட்சி களின் தலைவர்களை அணுகி னோம். முதல்வரைச் சந்திக்கும் போது எங்களையும் அழைத்துப் போவதாக ஸ்டாலின் கூறினார்.
அமைச்சர்கள் குழு
தற்போது முதல்வரைச் சந் தித்தபோது, 7 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு வறட்சி நிவாரணம் குறித்து ஆய்வு செய்யப்படும் என கூறினார். இதனால், 5-ம் தேதி நடக்க இருந்த மறியல் போராட்டத்தை ஒத்திவைத்துள்ளோம். பாதிக் கப்பட்ட மக்களையும் அமைச் சர்கள் சந்திக்க வேண்டும் என கோரியுள்ளோம்.
முதல்வர் ஓ.பன்னீர்செல் வத்தை மு.க.ஸ்டாலின் 5-ம் தேதி சந்தித்துப் பேசுகிறார். இதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.
பாஜக சார்பில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கருத்து கேட்புக் கூட்டம் நடத்தியுள்ளார். அதிலும் எங்கள் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.