

இந்த ஆண்டு பள்ளி திறக்கும் நாள் அன்றே அனைத்து மாணவர்களுக் கும் இலவச பஸ் வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவுசெய்துள்ளது. கால தாமதத்தை தவிர்க்க பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் 12-ம் ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி மாணவ-மாணவிகள் அரசு பஸ்களில் பயணம் செய்து பள்ளிக்குச் சென்று வருகிறார்கள்.
ஆண்டுதோறும் ஏறத்தாழ 14 லட்சம் மாணவர்கள் இலவச பஸ் பாஸ் திட்டத்தால் பயன்பெற்று வருகிறார்கள். பள்ளி வேலை நாட்களில் மட்டும் பஸ் பாஸை பயன்படுத்திக் கொள்ளலாம். சீருடையுடன் செல்வது அவசியம். விடுமுறை நாட்களில், கோடை விடுமுறையில் இதைப் பயன்படுத்த இயலாது.
பள்ளி திறக்கும் நாளில் வழங்கப்படும்
பொதுவாக கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் திறக்கப்படும். அதன்பிறகு மாணவர்களிடம் விண்ணப்பங்கள், புகைப்படம் பெற்று தொடர்புடைய அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் சமர்ப்பிக் கப்படும். பஸ் பாஸ் வழங்குவதற்கு எப்படியும் ஜூன் 3-வது வாரம் ஆகிவிடும். ஒருசில பள்ளிகளில் ஒரு மாதம் கழித்தும் வழங்கப்படுவது உண்டு.
இந்நிலையில், இந்த ஆண்டு பள்ளி திறக்கும் நாள் அன்றே அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவுசெய்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
மாவட்ட வாரியான பட்டியல்
பஸ் பாஸ் வழங்க வேண்டிய மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையை மாவட்ட வாரியாக தொகுத்து என்.எஸ்.எஸ். இணை இயக்குநருக்கு ஏப்ரல் 30-ம் தேதிக்குள் அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
போக்குவரத்துக்கழக அலுவல கங்களில் இலவச பஸ் பாஸ் விண் ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து விரைவாக அனுப்ப தேவை யான நடவடிக்கைகளை எடுக்கும் படி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு மாவட்ட கல்வி அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.