தங்கம் விலை திடீர் சரிவு

தங்கம் விலை திடீர் சரிவு
Updated on
1 min read

தங்கத்தின் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.288 குறைந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.23 ஆயிரத்து 720-க்கு விற்கப்பட்டது.

சர்வதேச அளவில் தங்கம் விலை நேற்று கணிசமாகக் குறைந்ததால், சென்னையில் ஒரு பவுனுக்கு ரூ.288 குறைந்து ரூ.23 ஆயிரத்து 720-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 965-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.3,001-க்கு விற்கப்பட்டது.

விலை குறைவு ஏன்?

இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, ‘‘சர்வதேச அளவில் தங்கம் விலையில் நேற்று கணிசமா கக் குறைந்திருந்தது. மேலும், தங்கத்தின் தேவையும் சிறிய அளவு குறைந்துள்ளது. இதற்கிடையே, இந்திய ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்பும் குறைந்தது. இதனால், உள்ளூரில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.288 குறைந்துள்ளது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in